LPG சிலிண்டருக்கான மானியம் கிடைக்கவில்லையா? உடனே சரி பாருங்க!

0
LPG சிலிண்டருக்கான மானியம் கிடைக்கவில்லையா? உடனே சரி பாருங்க!
LPG சிலிண்டருக்கான மானியம் கிடைக்கவில்லையா? உடனே சரி பாருங்க!
LPG சிலிண்டருக்கான மானியம் கிடைக்கவில்லையா? உடனே சரி பாருங்க!

சிலிண்டருக்கான மானியம் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிலிண்டருக்கான மானியம் கிடைத்துவிட்டதா என்பதை எப்படி சரிபார்க்கலாம் என்பதற்கான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LPG சிலிண்டர் மானியம்

உலகம் முழுவதுமே வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. அதாவது, சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டருக்கான (LPG) மானியம் அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டம் வரைக்கும் பொதுமக்களுக்கு முறையாக மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதற்குப் பிறகு சில மாதங்கள் யாருமே சிலிண்டருக்கான மானியம் வழங்கப்படவில்லை. இதனால், மானியத்தொகை நிறுத்தப்பட்டுவிட்டதோ என நினைத்த நேரத்தில் ஒரு சிலருக்கு மட்டும் மானியம் வழங்கப்பட்டு வந்தது.

TNPSC குரூப் 1 தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – நாளை (ஜூலை 27) ஆன்லைன் மாதிரி தேர்வு!

அதாவது, சிலிண்டருக்கான முழு விலையையும் கொடுத்து வாடிக்கையாளர்கள் சிலிண்டரை பெற்றுக்கொண்ட பிறகு வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிற்கே மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மானியத்தொகை ஏன் வரவில்லை என வாடிக்கையாளர்கள் புலம்பி கொண்டிருந்த நேரத்தில் சிலிண்டருக்கான மானியம் பெற சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதாவது, முதலில் சிலிண்டர் இணைப்பு வாங்கும் போது வாடிக்கையாளரின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிலிண்டருக்கான மானியம் பெற விரும்புபவர்கள் கட்டாயமாக சிலிண்டர் கார்டுடன் ஆதார் கார்டை இணைந்திருக்க வேண்டும். மேலும், சிலிண்டருக்கான மானியம் வங்கி கணக்கிற்கு வந்தடைந்து விட்டதா என்பது சந்தேகமாகவே இருக்கும். தற்போது எப்படி மானியத்தொகை கிடைத்துவிட்டதா என்பதை சரிபார்ப்பது என்பதை காணலாம்.

சரிபார்க்கும் வழிமுறைகள்

  • முதலில் Mylpg.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் ஆகியவற்றில் உங்களது சேவைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • Give your feedback online என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்பு, வாடிக்கையாளரின் மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், விநியோகஸ்தர் ஆகிய விவரங்கள் அனைத்தையும் நிரப்பி Feedback Type என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்பு, Complaint என்பதை தேர்ந்தெடுத்து Next கொடுத்தால் மானியத்தொகை கிடைத்துவிட்டதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!