நீட் தேர்விற்கு தமிழகத்தில் போதிய பயிற்சி இல்லையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

0
நீட் தேர்விற்கு தமிழகத்தில் போதிய பயிற்சி இல்லையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
நீட் தேர்விற்கு தமிழகத்தில் போதிய பயிற்சி இல்லையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
நீட் தேர்விற்கு தமிழகத்தில் போதிய பயிற்சி இல்லையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் 35 % பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தாக பள்ளி கல்வி துறை வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, நீட் தேர்வுக்கு போதிய பயிற்சி அரசு சார்பில் இல்லை என்ற செய்தியை ஏற்க முடியாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்விற்கு தமிழகத்தில் போதிய பயிற்சி இல்லையா?

MBBS மற்றும் BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை 17-ம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற்றது. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மொத்தம் 497 நகரங்களில், 3,500-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை சுமார் 17.78 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இந்த ஆண்டு, நீட் தேர்ச்சியில் தமிழ்நாடு 28-வது இடத்துக்குப் பின் தங்கி உள்ளது.

நீட் தேர்வில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் படி, 12,840 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல் தெரிவித்துள்ளது. 17,972 பேர் தேர்வு எழுத பதிவு செய்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்; அதில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். சென்னையை பொறுத்தவரை நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்கள் 172 பேரில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. இந்த தேர்ச்சி விகிதம் இதுவரை நடந்த தேர்ச்சி விகிதங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.

Flipkart நிறுவனத்தின் பட்டதாரிகளுக்கான சூப்பர் அறிவிப்பு – WFH முறையில் வேலை வாய்ப்பு!

Exams Daily Mobile App Download

இதற்கு காரணம், அரசு சார்பில் நீட் தேர்வுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படாதது தான் என செய்தி வெளிவரும் நிலையில் அதை ஏற்க முடியாது என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மேலும் மாணவர்கள் தேர்வில் தன்னிறைவு அடையும் வரை பயிற்சி அளிக்கப்படும் என தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here