
மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்கள் கவனத்திற்கு.. நாமினியை தேர்வு செய்யவில்லையா? – செப்.30 இறுதி நாள்!
மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களுக்கு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஆனது முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை இறுதி அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நாமினி தேர்வு:
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் ( செபி ) ஆனது முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை தெரிவித்துள்ளது. அதன்படி மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கள் திட்டங்களுக்கான நாமினியை தேர்வு செய்யவில்லை எனில் செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு மேல் அந்தக் கணக்குகள் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களின் முதலீட்டாளர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் தங்கள் நாமினியை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
முன்னதாக நாமினியை தேர்வு செய்வதற்கு மார்ச் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று ஆறு மாதங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிதாக நாமினி தேர்வு செய்வது மற்றும் ஏற்கனவே இருக்கும் நாமினியின் பெயரை நீக்க விரும்பினாலும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செய்து முடித்துக் கொள்ள வேண்டும் என்று செபி எச்சரித்துள்ளது.
பாஸ்போர்ட் இல்லாமல் இனி பறக்கலாம்.. சிங்கப்பூர் அரசு புதிய நடவடிக்கை – வெளியான அப்டேட்!
நாமினியை தேர்வு செய்யாத முதலீட்டாளர்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் இதற்கான செய்திகள் அனுப்பப்படும். மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களுக்கான நாமினியை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.