பத்ம விருதுகளுக்கு மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பெயர்கள் பரிந்துரை – டெல்லி அரசு அறிவிப்பு!

0
பத்ம விருதுகளுக்கு மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பெயர்கள் பரிந்துரை - டெல்லி அரசு அறிவிப்பு!
பத்ம விருதுகளுக்கு மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பெயர்கள் பரிந்துரை - டெல்லி அரசு அறிவிப்பு!
பத்ம விருதுகளுக்கு மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பெயர்கள் பரிந்துரை – டெல்லி அரசு அறிவிப்பு!

நாட்டின் மிக உயரிய விருதான பத்ம விருதுகளுக்கு டெல்லியை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் பெயர்களை பரிந்துரை செய்ய இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

பத்ம விருதுகள்

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வரும் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்புகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னாக வெளியானது. அதாவது ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்கும், பன்முக திறமை கொண்டவர்களை தேர்வு செய்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பத்ம விருதுகள் 3 வகையின் கீழ் (பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண்) வழங்கி அரசு கௌரவித்து வருகிறது. அந்த வரிசையில் டெல்லியை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் பெயர்களை பரிந்துரை பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்ய இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 2 முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு உத்தரவு!

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்காக மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பெயர்களை பரிந்துரைக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்காக தொடர்ந்து ஓய்வில்லாமல் சேவையாற்றிய அவர்களை கவுரவிப்பது நம் கடமையாகும். இந்த பரிந்துரைகளின் கீழ் சிறந்த சேவையாற்றிய மருத்துவர்களின் பெயர்களை மக்கள் தெரிவிப்பார்கள்.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் விருதுக்கான பரிந்துரை பெயர்களை padmaawards.delhi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த மின்னஞ்சலில் வரும் பெயர்களில் தகுதியுடைய நபர்களை தேர்ந்தெடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் இறுதி பெயர் பட்டியலை இக்குழு அரசிடம் பரிந்துரை செய்யும். அதற்கு பின் விருதுக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here