PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – நாமினி அப்டேட் அவசியம்! முழு விபரங்கள் இதோ!

0
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - நாமினி அப்டேட் அவசியம்! முழு விபரங்கள் இதோ!
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - நாமினி அப்டேட் அவசியம்! முழு விபரங்கள் இதோ!
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – நாமினி அப்டேட் அவசியம்! முழு விபரங்கள் இதோ!

PF கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது கணக்கில் நாமினி அப்டேட் செய்ய வேண்டும். அந்த வகையில் PF கணக்கில் நாமினி அப்டேட் செய்வதற்கான எளிய வழிமுறைகள் குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

PF புதிய அறிமுகம்:

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வருங்கால வாய்ப்பு நிதி (PF) கணக்கு தொடங்கி வருகின்றனர். இந்த PF கணக்கானது தங்களது எதிர்கால தேவைக்கு உதவும் வகையில் அமைவதால் இந்த கணக்கை அனைவரும் தொடர்ந்து வருகின்றனர். அவ்வாறு PF கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது நாமினியை குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று அந்நிறுவனம் புதிய விதிமுறையை அறிமுகம் செய்துள்ளது.

ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்? அதிபர் விளக்கம்!

அவ்வாறு செய்வதன் மூலம் PF கணக்கு வைத்திருக்கும் நபர் திடீரென இறந்து விட்டால் அதன் பலன் அவரது நாமினிக்கு கிடைக்கும். ஏற்கனவே நாமினி வைத்திருப்பவர்கள் அதனை அப்டேட் செய்வதும் அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது PF கணக்கு வைத்திருப்பவர்கள் நாமினியை அப்டேட் செய்வது எப்படி என்பது குறித்த முழு விபரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

PF கணக்கில் நாமினி அப்டேட் செய்வதற்கான எளிய வழிமுறைகள்:

1. முதலில் https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. பின்னர் Services என்ற ஆப்ஷனில் Employees என்பதை தேர்வு செய்து, தோன்றும் பக்கத்தில் Member UAN/ Online Services என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

3. இப்போது உங்களது PF நம்பர் மற்றும் Password கொடுத்து Login செய்ய வேண்டும்.

4. அதன்பின் Manage Table சென்று E-Nomination தேர்வு செய்து, அதில் Yes கொடுத்து Family Declaration ஐ அப்டேட் செய்ய வேண்டும்.

5. அதனை தொடர்ந்து Add Family Details க்ளிக் செய்து Nomination Details என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

6. கடைசியாக Save EPF nomination என்பதை தேர்வு செய்து, தோன்றும் அடுத்த பக்கத்தில் e-sign என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

7. இப்பொழுது உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP யை பதிவிட்டு Submit கொடுக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!