IT நிறுவனங்களில் இனி ‘இதற்கு’ முழு அனுமதி உண்டு.. வெளியான அறிவிப்பு – ஆச்சர்யத்தில் ஊழியர்கள்!
IT நிறுவன ஊழியர்களுக்கு, நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு வசதிகள் அளிக்கப்பட்டு வருவதை போல், இனி தேவைப்படும் நபர்கள் மதுபானம் எடுத்துக் கொள்ளவும் புதிய வசதி கிடைத்துள்ளது.
IT பூங்காக்கள்:
IT நிறுவன ஊழியர்கள் தங்கள் பணி அழுத்தம் காரணமாக அதிக மன அழுத்தம் மற்றும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதனால் அவர்களின் மன அழுத்த பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் நிறுவனங்கள் பல்வேறு புதிய வசதிகளை ஊழியர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. அது போல் இதுவரை, நொய்டா ஐடி பூங்காக்களில் நிறுவனத்தின் உணவகம், விளையாட்டு கிளப்புகள், ஜிம்கள் போன்றவை இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இனி இவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது – தமிழகத்தில் புதிய நடைமுறை அமல்!
Follow our Instagram for more Latest Updates
ஆனால் டிசம்பர் 28 அன்று நொய்டாவில் IT நிறுவன போர்டு கூட்டம் நடைபெற்றது. அதில், 5 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட இடப்பரப்பில் உள்ள நிறுவனங்களின் கொள்கைகளை திருத்தி உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இனி IT நிறுவனங்களில் ஊழியர்களுக்கும், விருந்தினர்களுக்கும் மதுபானம் வழங்கவும், பார்களை திறந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் ஊழியர்களுக்கு தங்கள் பணிக்கு பிறகு ஓய்வு தேவை என்ற கோரிக்கையின் அடிப்படையில் இதற்கு அனுமதி அளித்துள்ளதாக நொய்டா ஆணையம் அறிவித்துள்ளது.