அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது – மாநில அரசு அதிரடி உத்தரவு!

0
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது - மாநில அரசு அதிரடி உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது - மாநில அரசு அதிரடி உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது – மாநில அரசு அதிரடி உத்தரவு!

கொரோனா பரவல் காரணமாக கொரோனா இரண்டு தவணை தடுப்பூசி போடும் பணி அதிகரித்து வருகிறது. இந்த வகையில் அசாம் மாநிலத்தில் தடுப்பூசி போடாத அரசு ஊழியர் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் கிடையாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அதிரடி உத்தரவு:

உலகம் முழுவதும் கடந்த 2 வருடங்களில் பொதுமக்கள் அனைவரையும் அதிக அச்சத்தில் ஆழ்த்தியது கொரோனா. இதன் பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டாக அரசு, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் முழு ஊரடங்கால் முடக்கப்பட்டது. ஆனால் கொரோனா வேகம் சற்று குறைந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பின. கொரோனா இரண்டு தவணை தடுப்பூசிகளும் போடப்பட்டு வந்தது. இந்நிலையில் ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவ தொடங்கின.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – முழு ஊரடங்கு ரத்து எதிரொலி!

ஓமைக்ரான் பரவலை தொடர்ந்து மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்தது. இந்நிலையில் புத்தாண்டு முதலே அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி போன்றவை கடுமையாக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் வாரம் தோறும் தவறாமல் நடைபெறுகிறது. மேலும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் ரூ.58,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

இந்த சூழ்நிலையில் அசாம் மாநில அரசு, ஒப்பந்த ஊழியர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர் மற்றும் தனியார் ஊழியர்கள் அனைவரும் கொரோனா இரண்டு தவணை தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும், தடுப்பூசி போட்ட பிறகு தான் அலுவலகத்திற்கு வர வேண்டும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த வகையில் தடுப்பூசி போடாதவர்கள் அலுவலகத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் அவர்கள் விடுப்பு அல்லது அசாதாரண விடுப்பு எடுத்துக் கொண்டால், சம்பளம் வழங்கப்படாது என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொது இடங்களுக்கு செல்லும் அனைத்து தரப்பினரும் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here