தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் ராமநாதபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக அரசு அறிவித்துள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது இதனால் அரசு கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கை அறிவித்தது. அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டது. அப்போதும் தொற்று பரவல் குறையாத காரணத்தால் அரசு சார்பில் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டது. அரசு தொடர்ந்து தடுப்பு பணிகளை மேற்கொண்டது. அதன் பிறகு கொரோனா பரவலை அடிப்படையாக கொண்டு மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டது.
இந்தியாவில் 53,000 ஸ்டார்ட் அப்களுடன், 5.7 லட்ச வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – மத்திய அரசு!
அதன்படி தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் பயன்பட்டால் தொற்று பாதிப்புகள் குறைந்து வருகிறது. இதனால் அரசு அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் 5 மாவட்டங்களில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக அரசு அறிவித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
தமிழகத்தில் கடந்த மாதம் 1491 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன. தற்போது வைரஸ் பரவல் குறைந்ததால் மொத்தம் 947 பகுதிகள் மட்டுமே கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளது. இதில் ராமநாதபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் அதிகமாக 136 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.