ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி பொருள் வாங்க வரிசையில் நிற்க வேண்டியதில்லை!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி பொருள் வாங்க வரிசையில் நிற்க வேண்டியதில்லை!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி பொருள் வாங்க வரிசையில் நிற்க வேண்டியதில்லை!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி பொருள் வாங்க வரிசையில் நிற்க வேண்டியதில்லை!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ். அதாவது புதிய முறையை அரசு அமல்படுத்த உள்ளது. இதன்பின், ரேஷன் பெற, ரேஷன் அட்டைதாரர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் தொல்லை இல்லை.

ஹாப்பி நியூஸ்:

நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல், மற்ற உணவுப் பொருட்களும் மலிவு விலையில் ரேஷன் கடைகள் வாயிலாக விநியோகிக்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே இச்சலுகைகளைப் பெற முடியும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் நிறையப் பேர் இச்சலுகைகளைப் பெறுவதில்லை. அதேபோல், மலிவு விலையில் உணவுப் பொருட்களை வாங்கி அவற்றைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் குற்றச்சாட்டுகளும் அதிகமாக உள்ளன. அதை தடுக்கும் விதமாக ரேஷன் கார்டு விதிமுறைகள் மாற்றப்பட்டு வருகிறது.

ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – ஜூலை 1ம் தேதி மீண்டும் திறப்பு! மாநில அரசு அறிவிப்பு!

இந்நிலையில் உத்தரகாண்ட் அரசு விரைவில் ஒரு புதிய திட்டத்தை தொடங்க உள்ளது. ரேஷன் கடையில் கிடைக்கும் இலவச ரேஷனைப் பெற தகுதியானவர்கள் இனி கடைகளுக்குச் செல்ல வேண்டியதில்லை என்று மாநில உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ரேகா ஆர்யா தெரிவித்துள்ளார். மேலும் புதிய திட்டத்தில் துறை செயல்பட்டு வருகிறது என்றார். விரைவில் முன்னோடித் திட்டமாக சில மாவட்டங்களில் தொடங்கப்படும். இனி தேவைப்படும்போது ஏடிஎம்களில் பணம் எடுப்பது போல், தகுதியானவர்கள் இனி உணவு தானியங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று கேபினட் அமைச்சர் ரேகா ஆர்யா கூறினார்.

Exams Daily Mobile App Download

ஏற்கனவே ஒடிசா மற்றும் ஹரியானாவில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உலக உணவுத் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் உணவு தானிய ஏடிஎம்கள் தொடங்கப்பட உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தற்போது உணவு தானிய ஏடிஎம் திட்டம் ஒரிசா மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது உத்தரகாண்ட் இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மூன்றாவது மாநிலமாக மாற உள்ளது. இந்த இயந்திரம் ஏடிஎம் இயந்திரம் போலவே செயல்படும். ஏடிஎம் போன்ற திரையும் இதில் இருக்கும். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அதிலிருந்து கோதுமை, அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஏடிஎம் இயந்திரம் போல எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here