தமிழகத்தில் பெயர் மாற்றம் செய்ய சென்னை வரை செல்ல தேவையில்லை – புதிய வசதி இதோ!
சென்னை மற்றும் மதுரையில் பதிவுத்துறை அலுவலங்கள் கூடுதலாக திறக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், பெயர் மாற்றம் மற்றும் பத்தரம் பதிவு செய்ய சென்னை வரை செல்ல தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் மாற்றம்:
தமிழகத்தில் மட்டுமே மொத்தமாக 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் இருக்கின்றன. இந்த சார் பதிவாளர் அலுவலகங்களில் நடக்கும் பணிகளை கண்காணிக்கவே 55 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், பதிவுத்துறையின் பெரும்பான்மையான வருவாய் சென்னை மண்டலம் வாயிலாகவே கிடைக்கிறது. இதனிடையே பத்திர பதிவிற்காக வரும் பொது மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், அதற்கான நிர்வாக பணியினை செய்ய முடியாமல் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Exams Daily Mobile App Download
இதனால், கூடுதலாக மண்டலங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, சென்னை மண்டலத்தில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பதிவு மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த மண்டலங்களை இரண்டாக பிரித்து சென்னை வடக்கு மற்றும் சென்னை தெற்கு என இரண்டு மண்டலங்களாக பிரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே போலவே மதுரையிலும் இரண்டு மண்டலங்களாக பிரிக்க உள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு விடுப்பு குறித்த அறிக்கை – தகவல் வெளியீடு!
மேலும், புதிய மண்டலங்களை உருவாக்க அரசும் ஒப்புதல் அளித்துள்ளதால் எந்தெந்த மாவட்டத்தை சார்ந்த மக்கள் பத்திர பதிவிற்கு எந்தெந்த மண்டலத்திற்கு வர வேண்டும் என்பதற்கான வரையறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், புதிய மண்டலங்கள் உருவாக்குவது தொடர்பான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பத்திர பதிவு, பெயர் மாற்றம் உள்ளிட்ட வேலைகளுக்கு சென்னை வரைக்கும் செல்ல தேவையில்லை. புதிதாக உருவாக்கப்படவுள்ள மண்டலங்களிலேயே பத்திர பதிவு மற்றும் பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.