தமிழகத்தில் இனி LKG & UKG வகுப்புகள் தேவையில்லை – பெற்றோர்கள் கருத்து!
தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை உயர்மட்டக் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டமானது நேற்று நடந்துள்ள நிலையில், அதில் மாணவர்களும், பெற்றோர்களும் தங்களின் பலவிதமான கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
கருத்து கேட்பு கூட்டம்:
தமிழக மாநில கல்விக் கொள்கை கூட்டமானது வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனங்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு நீதியரசர் முருகேசன் தலைமை வகித்தார்.
Exams Daily Mobile App Download
இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த மாணவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை குறைப்பது, விளையாட்டு மைதானம் அமைப்பது, பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது, மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சமத்துவ ரீதியாக கல்வியை அளிப்பது போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுக்கான பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
மேலும் பெற்றோர்கள், தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் LKG & UKG வகுப்புகள் இருப்பதால் தான் அதிக கட்டணத்தை செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். எனவே, இனி தமிழகத்தில் LKG & UKG வகுப்புகளை நடத்த அரசு அனுமதிக்க கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.