WhatsApp ல் இனி Screenshot எடுக்க தடை? வரவிருக்கும் புதிய அப்டேட்!

0
WhatsApp ல் இனி Screenshot எடுக்க தடை? வரவிருக்கும் புதிய அப்டேட்!
WhatsApp ல் இனி Screenshot எடுக்க தடை? வரவிருக்கும் புதிய அப்டேட்!
WhatsApp ல் இனி Screenshot எடுக்க தடை? வரவிருக்கும் புதிய அப்டேட்!

வாட்ஸ்ஆப் செயலியில் கூடிய விரைவில் ஒரு அருமையான பிரைவசி அப்டேட் வெளியாக இருக்கிறது. அதாவது, ஒரு முறை மட்டும் பார்க்கும் புகைப்படத்தை screenshot எடுக்க முடியாத வண்ணம் ஒரு அப்டேட் வெளியாக இருக்கிறது.

Whatsapp அப்டேட்:

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் நிறுவனம் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டபடியே இருந்து வருகிறது. மேலும், வாட்ஸ்ஆப் நிறுவனம் அதிகமாக பிரைவசிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தான் பில்லியன்கணக்கான பயனாளர்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு அப்டேட்க்காகவும் பயனாளர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது வரைக்குமே எக்கச்சக்கமான அப்டேட்கள் வெளியாகிவிட்டது.

அடுத்த நான்கு நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இன்னும் சில அப்டேட்களை வாட்ஸ்ஆப் கைவசம் வைத்திருக்கிறது. அதாவது, உங்களது DP மற்றும் Last seen ஆகியவற்றை யார் யாரெல்லாம் பார்க்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம். மேலும், ஆன்லைனில் இருப்பதையும் உங்களால் மறைத்துக்கொள்ள முடியும். இது மட்டுமல்லாமல் ஒரு குரூப்பில் இருந்து வெளியேறும் போது யாருக்குமே தெரியாமல் silent ஆக வெளியேறிவிடலாம். மேலும், குரூப்பில் யாராவது தேவையில்லாத செய்தியை பரப்பினால் அந்த செய்தியை நீக்கம் செய்யும் தகுதியையும் அட்மின் பெற்றிருக்கும் வகையில் வாட்ஸ்ஆப் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், வாட்ஸ்ஆப் ஒருவரின் பிரைவசியை மேம்படுத்துவதில் தான் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. அதாவது, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் வாட்ஸ்ஆப் நிறுவனம் ஒருமுறை மட்டும் பார்க்க முடியும்படியான அப்டேட் ஒன்றை வெளியிட்டது. ஆனால், இந்த ஒருமுறை மட்டும் பார்க்கும் புகைப்படத்தை பலரும் Screenshot எடுத்து கொள்வதால் அதனை இனிமேல் Screenshot எடுத்துக்கொள்ள முடியாத அப்டேட ஒன்றை வாட்ஸ்ஆப் வெளியிடவுள்ளது. இது மட்டுமல்லாமல் இன்னும் சில வாரங்களில் பல அப்டேட் வெளியாக இருக்கிறது. அதாவது, வாட்ஸ்ஆப்பில் அவதார் உருவங்கள் ஆகிய அப்டேட் கிடைக்க இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!