இனி ‘இவர்களுக்கு’ பென்ஷன் தொகை கிடையாது? உச்சநீதிமன்றம் அதிரடி!

0
இனி 'இவர்களுக்கு' பென்ஷன் தொகை கிடையாது? உச்சநீதிமன்றம் அதிரடி!
இனி 'இவர்களுக்கு' பென்ஷன் தொகை கிடையாது? உச்சநீதிமன்றம் அதிரடி!
இனி ‘இவர்களுக்கு’ பென்ஷன் தொகை கிடையாது? உச்சநீதிமன்றம் அதிரடி!

ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை அறிவித்துள்ளது. இது ஓய்வூதியதாரர்களுக்கு பலன் அளிக்கும் விதமாக இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓய்வூதிய திட்டம்:

ஓய்வூதியம் என்பது அரசு துறையில் பணிபுரிந்து வயது முதிர்வு காலம் வரை பணிபுரிந்து தங்கள் பணியை நிறைவு செய்தவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அரசு வழங்கும் தொகையாகும். அரசு ஊழியர்கள் அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெரும் காரணம் சட்டரீதியான விதிகளின் கீழ் ஓய்வு பெறுதல் மற்றும் அவருடைய மொத்த பணிக்காலம் ஆகிய தன்மைகள் அடிப்படையில் பல்வேறு வகையான ஓய்வூதிய விதிகள் அளிக்கின்றன. ஓய்வூதிய விதிகளின்படி ஊழியர் பணிபுரிந்த காலத்தையும் கடைசியாக பெற்ற ஊதியத்தையும் கொண்டு கணக்கிடப்படுகிறது.

அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி ரத்து – கவுன்சில் முக்கிய அறிவிப்பு!

அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ராணுவ வீரர்களுக்கு ஊனமுற்றோர் பென்ஷன் வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்து ஏற்கனவே ராணுவ வீரர்கள் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. மேலும் இந்த வழக்கை விசாரிக்க மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் கே.எம்.நடராஜ் ஆஜராகினார். ஊனமுற்றோருக்கு பென்சன் வழங்க வேண்டும் என்றால் ராணுவ சேவைக்கும் சம்பத்தப்பட்ட வீரர் ஊனமுற்றதற்கும் தொடர்பு இருக்க வேண்டும் என வாதிட்டார்.

Exams Daily Mobile App Download

இந்த வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் ராணுவ சேவையின் போது உடல் ஊனமுற்ற ராணுவ வீரர்களுக்கும்,மேலும் ராணுவ சேவையால் உடல் ஊனம் 20% மோசமடைந்தவர்களுக்கும் மட்டுமே ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி இராணுவ சேவை நேரத்தில் இல்லாமல் சாலை விபத்து ஏற்பட்டு உடல் ஊனமுற்றிருந்தால் அவர்களுக்கு ஊனமுற்றோர் ஓய்வூதியம் வழங்கபடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here