இந்திய பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களை நியமிக்க இனி NET தேர்வு கிடையாது? புதிய வழிமுறை!

0
இந்திய பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களை நியமிக்க இனி NET தேர்வு கிடையாது? புதிய வழிமுறை!
இந்திய பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களை நியமிக்க இனி NET தேர்வு கிடையாது? புதிய வழிமுறை!

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு NET தேர்வு தேவையில்லை என யுஜிசி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், அதற்கான சில வழிமுறைகளையும் யுஜிசி வெளியிட்டுள்ளது.

NET தேர்வு

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்று கொண்டிருக்கும் பேராசிரியர்களை பணியில் அமர்த்தலாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. ஆனால், யுஜிசி அதற்கு சில வழிமுறைகளையும் விதித்துள்ளது. அதாவது, பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு பிஎட் படித்திருப்பது அவசியமில்லை மற்றும் நெட் தேர்வில் தேர்ச்சியாகியிருக்க வேண்டிய அவசியமில்லை என அறிவித்துள்ளது.

ஆனால், குறைந்தது 15 வருட அனுபவமாவது இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்களது பணித்துறையில் ஏதேனும் முக்கிய பங்களிப்பு செய்திருந்தாலும் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு கற்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம், தொழில்முனைவு, வணிகம், சமூக அறிவியல், ஊடகம், இலக்கியம், நுண்கலை, சிவில் சேவைகள், ஆயுதப்படை, சட்ட தொழில், பொது நிர்வாகம் ஆகிய துறைகளில் ஏதேனும் பங்களிப்பு செய்திருக்க வேண்டும்.

தமிழக அரசு விரைவு பேருந்துகளில் நிரந்தர ஓட்டுனர்கள்? வலுக்கும் கோரிக்கை!

மேலும், விருப்பமுள்ள ஆசிரியர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களது பங்களிப்பு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஒரு வருடத்திற்குள் கண்டிப்பாக பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆசிரியர்களின் சேவைகளை பொறுத்து நான்கு ஆண்டுகள் வரைக்கும் கூட பணி நீட்டிப்பு செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!