Google Meet பயனர்கள் கவனத்திற்கு – இனி இலவச சேவை கிடையாது!

0
Google Meet பயனர்கள் கவனத்திற்கு - இனி இலவச சேவை கிடையாது!
Google Meet பயனர்கள் கவனத்திற்கு - இனி இலவச சேவை கிடையாது!
Google Meet பயனர்கள் கவனத்திற்கு – இனி இலவச சேவை கிடையாது!

கூகுள் நிறுவனத்தின் இலவச Google Meet சேவையை அந்நிறுவனம் நிறுத்தி விட்டது. இதன் காரணமாக கூகுள் மீட் சேவையை 60 நிமிடங்களை கடந்து பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

கூகுள் இலவச சேவை நிறுத்தம்:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் இதர கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் கற்றலை தொடர ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்புகள் கூகுள் மீட் செயலி மூலம் நடைபெற்று வருகிறது. அலுவலகங்களில் ஊழியர்களுடனான கலந்தாலோசனையும் கூகுள் மீட் செயலி மூலம் நடைபெறுகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் கூகுள் மீட் சேவை மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று உச்சம் அடைந்ததால், கூகுள் மீட் க்ரூப் மீட்டிங் சேவை இலவசமாக வழங்கப்பட்டது. 100 பங்கேற்பாளர்களுடன் கூகுள் மீட் வீடியோ கான்பரன்சிங் செய்யலாம். இது மிகவும் பாதுகாப்பான செயலியாக உள்ளது. யாரெல்லாம் மீட்டிங்கில் இணைய வேண்டும் என்பதை மீட்டிங் நடத்துபவர் கட்டுப்படுத்தலாம். கூகிள் மீட்டைப் பயன்படுத்தி 24 மணிநேரமும் சேட் செய்யும் வசதியும் உள்ளது. தற்போது வரை கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் ஒரு வருடங்களுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ளது இந்த இக்கட்டான காலத்தில் மாணவர்களின் ஆன்லைன் கல்விக்கு கூகுள் மீட் பேருதவியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இப்படி அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள கூகுள் மீட் செயலியின் இலவச சேவையை அந்நிறுவனம் நிறுத்தி விட்டது. இதன் காரணமாக கூகுள் மீட் சேவையை 60 நிமிடங்களை கடந்து பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஜூம் தொடர்ந்து இலவச சேவையை வழங்கி வருகிறது. மேலும் கூகுள் மீட்டில் அன்லிமிட்டட் குரூப் காலிங் அம்சத்தைப் பெற பயனர்கள் Google Workspace சந்தாவை வாங்க வேண்டும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் மீட்டிற்க்காக பிரீமியம் சந்தாவை நீங்கள் தனித்தனியாக வாங்க முடியாது இது Google Workspace பண்டலில் மட்டுமே கிடைக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!