கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு வேலை கிடையாது – உத்தரவு பிறப்பிப்பு!

0
கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு வேலை கிடையாது - உத்தரவு பிறப்பிப்பு!
கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு வேலை கிடையாது - உத்தரவு பிறப்பிப்பு!
கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு வேலை கிடையாது – உத்தரவு பிறப்பிப்பு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை பல நாடுகள் அறிவித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் தடுப்பூசி கட்டாயமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தடுப்பூசி கட்டாயம்

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு முதன் முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவியது. இதில் குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர். ஆனாலும் இந்த கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து கொரோனாவை விட பல மடங்கு வேகமாக பரவி வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வர திட்டமிட்டோர் கவனத்திற்கு – இனி தனிமைப்படுத்துதல் இல்லை!

இதில் குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவியது. மேலும் இது டெல்டா வகை வைரஸை விட இரண்டு மடங்கு வேகமாக பரவும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவில் இருந்து மீள ஒரே நம்பிக்கையான தடுப்பூசியை பொதுமக்கள் அனைவரும் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் ஒரு சில நாடுகளில் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிப்.19 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – பிப்.17 முதல் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை!

இதில் குறிப்பாக கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடுமையான் கொரோனா கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்புகளும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தாத நகராட்சி பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு நகராட்சி பணியாளர்களும், மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here