அமெரிக்க H1B விசா பெற திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு – நேர்காணல் இல்லை!

0
அமெரிக்க H1B விசா பெற திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு - நேர்காணல் இல்லை!
அமெரிக்க H1B விசா பெற திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு - நேர்காணல் இல்லை!
அமெரிக்க H1B விசா பெற திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு – நேர்காணல் இல்லை!

கொரோனாவை தொடர்ந்து அதன் உருமாறிய ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் H1B விசா தொடர்பான சந்திப்பை அதிகாரிகள் எதிர்கொள்வதை தவிர்க்க தற்காலிகமாக அமெரிக்க அரசு ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நேர்காணல் இன்றி H1B விசா:

கொரோனா வைரஸ் ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகளாக உலக நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு தளர்வுகள் தளர்த்தப்பட்டு மக்களும் தங்களுடைய இயல்பு வாழ்க்கை முறைக்கு திரும்பி வருகின்றனர். இதன் அடிப்படையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு சார்த்த அலுவலங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களும் இயல்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் உருவாகிய ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் அனைத்து நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – பணிமாறுதல் கலந்தாய்வு! முக்கிய உத்தரவு!

இதன் அடிப்படையில் அமெரிக்க அரசு தற்போது விசா தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் ஓமைக்ரான் தொற்றின் தாக்கம் தீவிரமடையும் நிலையில் அமெரிக்க அதிபர் அவர் வெளியிட்ட அறிவிப்பில் சில விசாக்கள் நேர்காணல் இல்லாமல் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு விதிகளில் தளர்வு அளித்துள்ளது. இதனால் நேரடி சந்திப்பை அதிகாரிகள் எதிர்கொள்வதை தவிர்ப்பதற்காகவும், தற்போது மீண்டும் உலகளாவிய பயணம் அதிகமாக உள்ளதால் விசாக்கள் வழங்கப்படுவதற்கான காலத்தை வெகுவாக குறைப்பதற்காகவும் தற்காலிகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? வேகமெடுக்கும் ஓமிக்ரான்! முதல்வர் இன்று ஆலோசனை!

பல்வேறு அலைகளை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் அமெரிக்க அரசு விசா வழங்குவது தொடர்பாக தூதரகங்களுக்கு ஒரு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள வகையில் கல்வி தொடர்பாக வழங்கப்படும் H3 விசா நிறுவனங்களுக்கிடையே பணி மாறுவோருக்கு வழங்கப்படும் O விசா, தனித்திறன் ஊழியர்களுக்கு வழங்கப்படும் H1B விசா ஆகியவற்றுக்கு நேர்காணல் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது . 2022 டிசம்பர் வரை நேர்காணல்கள் இல்லாமல் இத்தகைய விசாக்களுக்காக தூதரக அதிகாரிகள் அனுமதி அளிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து H1B விசாக்கு திட்டமிடுவோருக்கு நேர்காணல் நடைமுறைக்கு வர வேண்டிய தேவையில்லை என்ற சூப்பர் அறிவிப்பை அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!