ஜூன் 28ம் தேதி முதல் முகக்கவசம் கட்டாயமில்லை – இத்தாலி அரசு அறிவிப்பு!!

0
ஜூன் 28ம் தேதி முதல் முகக்கவசம் கட்டாயமில்லை - இத்தாலி அரசு அறிவிப்பு!!
ஜூன் 28ம் தேதி முதல் முகக்கவசம் கட்டாயமில்லை - இத்தாலி அரசு அறிவிப்பு!!
ஜூன் 28ம் தேதி முதல் முகக்கவசம் கட்டாயமில்லை – இத்தாலி அரசு அறிவிப்பு!!

இத்தாலியில் வரும் ஜூன் 28ம் தேதி முதல் வைரஸ் எவ்வளவு விரைவாக பரவுகிறது என்பதன் மூலம் “வெள்ளை” என்று பெயரிடப்பட்ட பகுதிகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டியதில்லை என்று அரசு அறிவித்துள்ளது.

முகக்கவசம்:

2020ம் ஆண்டு முதல் தற்போது வரை இத்தாலி நாட்டில் 1,27,291 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும், 40.25 லட்சம் பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இத்தாலியில் 46 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் 30 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் ஷாப்பிங் அம்சம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

இது நாட்டின் மக்கள் தொகையான 60 மில்லியனில் 16 மில்லியன் ஆகும். ஐரோப்பாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான இத்தாலியில் முகக்கவசம் இனி கட்டாயமாக்கப்படாது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வைரஸ் எவ்வளவு விரைவாக பரவுகிறது என்பதற்கான இத்தாலியின் வகைப்பாடு முறையின் கீழ் “வெள்ளை” என்று பெயரிடப்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியும் தேவையை நீக்குவதாக சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா பேஸ்புக்கில் அறிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

தூர வடமேற்கில் உள்ள சிறிய ஆஸ்டா பள்ளத்தாக்கு தவிர அனைத்து இத்தாலிய பகுதிகளும் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெரான்சாவின் அறிவிப்பு இத்தாலியின் கொமிட்டடோ டெக்னிகோ சயின்டிஃபிகோ (சி.டி.எஸ்) விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. ஜூன் 28 க்குள், இத்தாலி முழுவதும் “வெள்ளை” மண்டலமாக வகைப்படுத்தப்படும் என்று நிபுணர்கள் அறிவித்துள்ளனர். கடந்த திங்கள் கிழமை மட்டும் நாடு முழுவதும் 21 உயிரிழப்புகள் மற்றும் 495 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!