தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை – ரேஷன் கடை பணியாளர்கள் அதிர்ச்சி!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை - ரேஷன் கடை பணியாளர்கள் அதிர்ச்சி!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை - ரேஷன் கடை பணியாளர்கள் அதிர்ச்சி!
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை – ரேஷன் கடை பணியாளர்கள் அதிர்ச்சி!

தமிழக அரசின் ஊழியர்கள் மற்றும் அனைத்து பொது துறை ஊழியர்களுக்கும் அரசு அகவிலைப்படி உயர்வினை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு தனி அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிட்டுள்ளது.

ரேஷன் கடை ஊழியர்கள்:

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஜனவரி முதல் அரசின் ஊழியர்கள் மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் விரைவில் அகவிலைப்படி உயர்வினை அரசு வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஊழியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு, ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு அகவிலைப்படி வழங்க உத்தரவிட்டுள்ளது.

IPL அப்டேட் : வார்னர் எந்த அணிக்கும் கேப்டனாக வாய்ப்பில்லை – ஆகாஷ் சோப்ராவின் ஷாக் ரிப்போர்ட்!

அதாவது சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அரசின் ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி 2022 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு அமலுக்கு வந்துள்ளது. ஆனால் தற்போது கூட்டுறவு சங்க ஊழியர்கள் சங்க கூடுதல் பதிவாளர் மு.அருணா அவர்கள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது – புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!

அந்த அறிவிப்பில், தமிழக அரசு ஊழியர்களுக்கு 2020 ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடை விற்பனையாளர்கள், கட்டுனர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க அரசின் வெளியிட்டுள்ள உத்தரவின் படி புதிய அடிப்படை ஊதியத்தில் 14% அகவிலைப்படி அளிக்கப்படும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பின்னர் மாதம் தோறும் வழங்க வேண்டிய DA உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் DA உயர்வு அளிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக அனைத்து மண்டல சங்கங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!