அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு தடையில்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

1

அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு தடையில்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தமிழக அரசு மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளி மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதல் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு இடைக்காலதடை அறிவிக்க மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

மருத்துவ படிப்பிற்கான இடஒதுக்கீடு:

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் எனக்கு தகுதி இருந்தும் மருத்துவம் படிக்கமுடியாத நிலையில் இருப்பதாக தனியார் பள்ளி மாணவி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அந்த மனுவில்,” நீட் தேர்வில் 565 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் நீட் தேர்வில் 200 மதிப்பெண்கள் கூட தாண்டாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது நியாயமற்றது. என கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தற்போது அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பபட்டு விட்டதால் தமிழக அரசு அறிவித்த இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தனர். அரசு பள்ளிகளின் தரம் குறைவாக இருப்பதால் தான் மாணவர்களுக்கு இது போன்ற பிரச்சனை ஏற்படுவதாக தெரிவித்தனர். மேலும் அரசு பள்ளிகளின் தரத்தினை உயர்த்த தமிழக அரசிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் அரசு பள்ளி மாணவர்களை தங்கள் பிள்ளைகளாக பார்க்க வேண்டும் தவிர எதிரியாக பார்க்க கூடாது என அறிவுரை வழங்கினர். இந்த இடஒதுக்கீடு ஏழை மாணவர்களும் மருத்துவ படிப்பிற்கு உதவியாக இருக்கும் எனவே இந்த மனு குறித்து தமிழக அரசு ஜனவரி 5-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் 405 அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்து பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. இட ஒதுக்கீடு தடையில்லை???
    தரமற்ற மூன்றாம் தர நிர்வாகம் தான் நமக்கு கிடைக்கும்.
    முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் கூட வேலை இல்லை.
    இட ஒதுக்கீடு மூலம் மூன்றாம் நிலை மாணவர்களுக்கு வாய்ப்பு.
    இதை நீங்கள்_ அரசு விளையாட்டு போட்டிகளிலும் தொடரலாம்.
    எதற்காக கல்வியில் மட்டும் தரமற்ற மாணவர்கள் சேர்க்கை???
    ஸ்போர்ட்ஸ்- ல் கூட இட ஒதுக்கீடுகள் வைத்து நாட்டை குட்டிச் சுவர் ஆக்க வேண்டிய து தானே.
    ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை பாழாக்கி யது போதாதா???
    இன்னும் மக்களை பிச்சை காரர்களாக வைத்து இருப்பது ஏன்?
    இலவசம் என்ற பெயரில்.
    இன்னும் 70 சதம் பின் தங்கிய வகுப்பு மக்கள்? எப்படி?
    முன்னேற்றம் காண வில்லை யா??
    வன்னியர்கள் 20% மேலும் மிகவும் பின் தங்கிய மக்கள் என்று தனி ஒதுக்கீடு???
    நாடு தேறுமா??? எங்கே செல்கிறது நாடு??
    பின்னோக்கி செல்கிறோம் நாம்.
    திறமைக்கு மதிப்பு இல்லை நமது நாட்டில்.
    வாழ்க தமிழகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!