NLC INDIA நிறுவனத்தில் ரூ.2,60,000 ஊதியத்தில் பணி வாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

0
NLC INDIA நிறுவனத்தில் ரூ.2,60,000 ஊதியத்தில் பணி வாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
NLC INDIA நிறுவனத்தில் ரூ.2,60,000 ஊதியத்தில் பணி வாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
NLC INDIA நிறுவனத்தில் ரூ.2,60,000 ஊதியத்தில் பணி வாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC INDIA) இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியாகியது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Dy. General Manager, Chief Manager, Additional Chief Manager & Dy. Manager ஆகிய பணிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் (07.07.2022) இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

NLC INDIA வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (NLC) நிறுவனத்தில் மேற்கண்ட பணிகளுக்கு மொத்தம் 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Dy. General Manager (Finance), Chief Manager (Finance) மற்றும் Additional Chief Manager (Finance) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் CA / ICWAI / ICMAI / MBA / Degree தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
    Exams Daily Mobile App Download
  • Dy. Manager (Secretarial) பணிக்கு விண்ணப்பதாரர்கள் (Member of the Institute of Company Secretaries of India.) இந்திய செயலாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் தேவையான அளவிற்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • 01.06.2022 அன்றைய தினத்தின் படி, Dy. General Manager (Finance) பணிக்கு 52 வயது, Chief Manager (Finance) பணிக்கு 50 வயது, Additional Chief Manager (Finance) பணிக்கு 47 வயது, Dy. Manager (Secretarial) பணிக்கு 32 வயது, அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இப்பணிகளுக்கு OBC விண்ணப்பதாரருக்கு 3 வருடமும், SC, ST விண்ணப்பதாரருக்கு 5 வருடம், PWD (General) Candidates விண்ணப்பதாரருக்கு 10 வருடம், PWD (OBC) Candidates விண்ணப்பதாரருக்கு 13 வருடம், PWD (SC/ST) விண்ணப்பதாரருக்கு 15 வருடமும் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
  • Dy. General Manager பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.1,00,000/- முதல் ரூ.2,60,000/- வரை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. (24.84 Lakhs per Annum)
  • Chief Manager மற்றும் Additional Chief Manager பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.90,000/- /- முதல் ரூ.2,40,000/- வரை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. (22.03 Lakhs per Annum)
  • Dy. Manager பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/-வரை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. (14.68 Lakhs per Annum)

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • UR / EWS / OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு ரூ.854/- மற்றும் SC / ST / PWBD / Ex–servicemen விண்ணப்பதாரர்களுக்கு ரூ.354/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
  • இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
NLC INDIA விண்ணப்பிக்கும் முறை:

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC INDIA) இந்தியா லிமிடெட் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இப்பதிவின் கீழே கொடுத்துள்ள இணையதள இணைப்பின் வாயிலாக ஆன்லைன் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து, 07.07.2022 அன்று 23.45 மணிக்குள் சமர்ப்பித்து பயனடைய அறிவுறுத்தப்பட்டது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவடைவதால் இன்றே விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

NLC INDIA Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here