திருச்சி NITயில் தேர்வில்லாத வேலை – இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0

திருச்சி NITயில் தேர்வில்லாத வேலை – இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதற்கான முழு தகவல்களையும் இப்பதிவில் வழங்கியுள்ளோம். எனவே ஆர்வமுள்ளவர்கள் தொடர்ந்து இப்பதிவை வாசித்து முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 20.06.2022 ம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

NIT Trichy வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் Junior Research Fellow பணிக்கு என ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Metallurgy / Materials Science and Engineering பாடப்பிரிவில் M.E / M.Tech டிகிரி அவசியம் முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கு GATE தேர்வு தேர்ச்சி ஆனவர்கள் அல்லது Metallurgical and Materials Engineering பாடப்பிரிவில் PhD பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.31,000/- வழங்கப்படும். மேலும் இத்துடன் ஊதியத்தில் இருந்து 16% அளவிற்கு HRA வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். மேலும் இதற்கான நேர்காணல் 20.06.2022 அன்று நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
NIT Trichy விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பதிவின் கீழே கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளவும். நாளை இப்பணிக்காக நேர்காணல் நடைபெற உள்ளதால், தகுதியானவர்கள் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்துகிறோம்.

NIT Trichy Job Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!