NIT திருச்சியில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பிக்கலாம்..!

0
NIT திருச்சியில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை - இன்றே விண்ணப்பிக்கலாம்..!
NIT திருச்சியில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை - இன்றே விண்ணப்பிக்கலாம்..!

NIT திருச்சியில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பிக்கலாம்..!

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி (NIT) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

NIT JRF பணியிடங்கள்:

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், Junior Research Fellow பதவிக்கு என்று மொத்தமாக ஒரே ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

NIT JRF கல்வி தகுதி :
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் Power Electronics / Power Systems பாடப்பிரிவில் M.E / M.Tech பட்டம் பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
NIT JRF அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் போதிய அளவிற்கு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். கிடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

NIT JRF ஊதிய விவரம்:

Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது ரூ.31,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். மேலும் ஊதியத்துடன் 18% HRA (ரூ.36,580/- மொத்த ஊதியம்) வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

NIT JRF தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் நேர்காணல் குறித்து தகுதியான விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

NIT JRF விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து பரிந்துரைக்கப்பட்ட வடிவில் தயார் செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு 15.06.2022 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 20.06.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வந்து சேரும்படி, விண்ணப்பித்து பயனடையவும்.

NIT JRF Notification & Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!