NIT திருச்சியில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பிக்கலாம்..!
தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி (NIT) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Institute of Technology Trichy (NIT) |
பணியின் பெயர் | Junior Research Fellow |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
NIT JRF பணியிடங்கள்:
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், Junior Research Fellow பதவிக்கு என்று மொத்தமாக ஒரே ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
NIT JRF கல்வி தகுதி :
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் Metallurgy / Metallurgical Engineering / Metallurgical and Materials Engineering / Materials Engineering / Mechanical Engineering / Production Engineering பாடப்பிரிவில் BE / B.Tech / M.E / M.Tech பட்டம் பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Metallurgical and Materials Engineering பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
NIT JRF அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் கற்பித்தல் துறையில் / ஆராய்ச்சி துறையில் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் போதிய அளவிற்கு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.
NIT JRF ஊதிய விவரம்:
- Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது ரூ.31,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
- மேலும் ஊதியத்துடன் 16% HRA வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
NIT JRF தேர்வு முறை:
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
- மேலும் நேர்காணல் அன்று விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
NIT JRF விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து பரிந்துரைக்கப்பட்ட வடிவில் தயார் செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட தபால் முகவரிக்கு பதிவஞ்சல் / விரைவுத் தபால் மூலம் 08.07.2022 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.