தாஜ்மஹாலில் ஆகஸ்ட் 21 முதல் இரவு நேர பார்வையாளர்களுக்கு அனுமதி – சுற்றுலாத்துறை அறிவிப்பு!

0
தாஜ்மஹாலில் ஆகஸ்ட் 21 முதல் இரவு நேர பார்வையாளர்களுக்கு அனுமதி - சுற்றுலாத்துறை அறிவிப்பு!
தாஜ்மஹாலில் ஆகஸ்ட் 21 முதல் இரவு நேர பார்வையாளர்களுக்கு அனுமதி - சுற்றுலாத்துறை அறிவிப்பு!
தாஜ்மஹாலில் ஆகஸ்ட் 21 முதல் இரவு நேர பார்வையாளர்களுக்கு அனுமதி – சுற்றுலாத்துறை அறிவிப்பு!

இந்திய கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் முக்கிய நினைவுச் சின்னமான தாஜ்மஹால் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் கழித்து பொதுமக்கள் பார்வைக்காக நாளை (ஆகஸ்ட் 21) மீண்டும் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பார்வைக்கு அனுமதி:

உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மஹால் டெல்லி ஆக்ராவில் அமைந்துள்ளது. 1960 களில் இந்தியாவை ஆட்சி செய்த முகலாய பேரரசர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் அவரின் நினைவாக அமைத்த கல்லறை தான் உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் ஆக உருவெடுத்தது. இந்த கட்டிடம் சுமார் 17 ஹெக்டேர் அதாவது 42 ஏக்கர் வளாகத்தை உள்ளடக்கியது. தவிர இதில் ஒரு மசூதியும், விருந்தினர் மாளிகையும், மூன்று பக்கங்களிலும் கட்டப்பட்ட தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரிப்பு – 2ம் அலை தாக்கம்!

தவிர உலக பாரம்பரியத்தால் போற்றப்படும் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றான தாஜ்மஹாலை 1983 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோ அறிவித்தது. இத்தனை சிறப்புகளையும் கொண்டுள்ள இந்த தாஜ்மஹால் கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி முதல் மூடப்பட்டது. இதனிடையே பகல் நேரங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுத்த அரசு கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தற்போது இரவு பார்வைக்காக அனுமதி கொடுத்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் நாளை (ஆகஸ்ட் 21) முதல் இரவு நேர பார்வையாளர்களுக்காக தாஜ்மஹால் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 21, 23 மற்றும் 24 ஆகிய வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையுள்ள வார இறுதி தேதிகளில் இந்த நினைவுச் சின்னம் ஒவ்வொரு வாரமும் மூடப்படும். தவிர பார்வையாளர்கள் தினசரி பார்வையிடுவதற்கு இரவு 8:30 முதல் 9: 00 வரையும், 9:00 மணி முதல் 9: 30 வரையிலும் 9: 30 முதல் 10: 00 மணி வரையும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 21 முதல் தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்படும் போது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு இடத்திலும் 50 சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான டிக்கெட்டுகளை ஒரு நாள் முன்பே ஆக்ராவின் 22 மால் சாலையில் அமைந்துள்ள ASI அலுவலகத்தின் கவுண்டரில் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் ஆக்ரா வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!