இரவு நேர ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்துமா? ட்விட்டரில் ட்ரெண்டிங்!

0
இரவு நேர ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்துமா? ட்விட்டரில் ட்ரெண்டிங்!
இரவு நேர ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்துமா? ட்விட்டரில் ட்ரெண்டிங்!
இரவு நேர ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்துமா? ட்விட்டரில் ட்ரெண்டிங்!

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் ஒவ்வொரு மாநிலங்களிலும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு தீர்வாகுமா? என ட்விட்டரில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இரவு நேர ஊரடங்கு:

இந்தியாவில் நாளொன்றுக்கு 1 லட்சம் புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்படுகிறது. அதே நேரத்தில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களிலும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதை கட்டுப்படுத்த மாநில அரசின் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மகாராஷ்டிரா, பஞ்சாப், ஜார்கண்ட், குஜராத், டெல்லி ஆகிய பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் காரணமாக கொரோனா பரவலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருந்து வந்தது.

TN Job “FB  Group” Join Now

தற்போது தேர்தல் முடிவுற்றதை தொடர்ந்து தமிழகத்திலும் சில கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற கேள்விகள் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்த தகவலானது ட்விட்டர் பக்கத்தில் #NightCurfew, #Corona என்ற ஹேஸ்டேக்குகளுடன் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதே நேரத்தில் அரசு அறிவித்த இந்த இரவு நேர ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்துமா? என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது. அதனடிப்படையில் ட்விட்டரில் பதிவான சிலரது கருத்துக்கள் சிந்திக்க தூண்டக்கூடிய விதத்தில் உள்ளன.

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை உத்தரவு!!

அவை, ‘பிரதமர் மோடி உள்ளிட்ட பெரிய தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் மக்கள் பெரும்பாலும் மாஸ்க் அணிவதில்லை. இதுபற்றி யாரும் கவனிப்பதில்லை. கேள்வியும் கேட்கப்போவதில்லை. இந்த இரவு நேர ஊரடங்கு எந்த பலனையும் தரப்போவதில்லை எனவும், பகலில் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரியும் மக்கள் இரவு நேரங்களில் வீடுகளில் உறங்கச் செல்வார்கள். அதனால் இரவு நேர ஊரடங்கில் எந்த பயனும் இருக்கப் போவதில்லை எனவும் பிரச்சார கூட்டங்களில் கூடும் மக்கள் கூட்டங்களை தடுத்தாலே கொரோனா வைரஸ் பரவாது’ எனவும் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!