இரவு ஊரடங்கு & 144 தடை உத்தரவு – மாநிலங்களின் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு கட்டுப்பாடுகள்! முழு விவரம் இதோ!

0
இரவு ஊரடங்கு & 144 தடை உத்தரவு - மாநிலங்களின் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு கட்டுப்பாடுகள்! முழு விவரம் இதோ!
இரவு ஊரடங்கு & 144 தடை உத்தரவு - மாநிலங்களின் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு கட்டுப்பாடுகள்! முழு விவரம் இதோ!
இரவு ஊரடங்கு & 144 தடை உத்தரவு – மாநிலங்களின் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு கட்டுப்பாடுகள்! முழு விவரம் இதோ!

இந்தியாவில் தற்போதைய ஒமிக்ரான் வழக்குகளின் எண்ணிக்கை 213 ஆக உள்ள நிலையில் இந்த நோய் பரவலைத் தடுக்க மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து இப்பதிவில் காணலாம்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்

தற்போது பல்வேறு உலக நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக உருவாகி கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு இந்தியாவில் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் அதன் முந்தைய பாதிப்புகளின் எண்ணிக்கையில் இரட்டிப்பு மடங்காக பதிவு செய்யப்பட்டு வரும் ஒமிக்ரான் வழக்குகளுக்கு மத்தியில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அது போல அதிகளவு மக்கள் தொகை கொண்ட இந்தியாவிலும் இந்த வைரஸ் பாதிப்பு 3ம் அலையை உருவாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

சென்னை பல்கலைக்கழகத்தில் 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து – மெகா மோசடி அம்பலம்!

இப்போது இந்தியா முழுவதும் ஓமிக்ரான் வழக்குகள் அதிகரித்து வருவதை அடுத்து, பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதற்கிடையில் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டை விட ஒமிக்ரான் வைரஸ் மூன்று மடங்கு அதிகமாக பரவக்கூடியது என்றும், வைரஸ் பரவுவதைத் தடுக்க அடிமட்ட அளவிலான உடனடி நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் வலியுறுத்தி இருக்கிறார்.

அந்த வகையில் மையத்தின் வழிகாட்டுதல்களின் கீழ் மாநிலங்கள் தோறும் இரவு ஊரடங்கு உத்தரவை மீண்டும் அமல்படுத்துதல், பெரிய அளவில் கூட்டம் கூடுவதைத் தடை செய்தல், அதிக நேர்மறை விகிதங்களை பதிவு செய்யும் மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்தியாவின் தற்போதைய ஒமிக்ரான் வழக்குகளின் நேர்மறை எண்ணிக்கை 213 ஆக உள்ளது.

அதிலும் டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 57 மற்றும் 54 வழக்குகள் பதிவாகியுள்ளன. இப்போது மாநிலங்கள் மற்றும் நகர வாரியான கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் ஒமிக்ரான் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இங்கே காணலாம்.

மும்பை:

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது அதிக மக்கள் கூடுவதைத் தடுக்க மும்பை காவல்துறை டிசம்பர் 16 முதல் டிசம்பர் 31 வரை நகரம் முழுவதும் 144 தடை உத்தரவை விதித்துள்ளது. இது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒரு இடத்தில் 50% திறன் கொண்டவர்கள் மட்டுமே எந்தவொரு நிகழ்விலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். நிகழ்வின் அமைப்பாளர்கள் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும்.

அது போல தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் மட்டுமே கடைகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள், மால்கள், நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை நடத்த அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் பொது போக்குவரத்து முற்றிலும் தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்:

பண்டிகைக் காலங்களில் ஒமிக்ரான் அச்சுறுத்தலைத் தடுக்கும் வகையில் குஜராத் அரசு 8 முக்கிய நகரங்களில் டிசம்பர் 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது. அந்த வகையில் அகமதாபாத், சூரத், ராஜ்கோட், வதோதரா, காந்திநகர், பாவ்நகர், ஜாம்நகர் மற்றும் ஜூனாகத் ஆகிய இடங்களில் தினமும் அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும்.

தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – டிச.24ம் தேதி திருப்புதல் தேர்வு நிறைவு!

அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் நள்ளிரவு வரை திறந்திருக்கும். உணவகங்கள் நள்ளிரவு வரை 75% திறனுடன் திறந்திருக்கும். அதே நேரத்தில் திரையரங்குகள் 100% திறனுடன் செயல்படலாம். ஜிம்கள் 75% திறனில் தொடர்ந்து செயல்படும். பூங்காக்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

கர்நாடகா:

ஒமிக்ரான் பரவல் கண்டறியப்பட்ட முதல் மாநிலமான கர்நாடகாவில் வரும் 2022 புத்தாண்டு பொதுக் கொண்டாட்டத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டிஜே இல்லாமல் 50% இருக்கை வசதி கொண்ட கிளப்புகள் மற்றும் உணவகங்களில் கொண்டாட்டங்களை நடத்துவதற்கு மாநில அரசு அனுமதித்துள்ளது. இவ்விழாவில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். இந்த கட்டுப்பாடுகள் டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை அமலில் இருக்கும்.

உத்தரப்பிரதேசம்:

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நொய்டா மற்றும் லக்னோ மாவட்டங்களில் 144 CrPC தடையை உத்தரப்பிரதேச அரசு செயல்படுத்தியுள்ளது. அதே போல சட்டம் ஒழுங்கு நிலைமையை மனதில் கொண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை கெளதம் புத் நகரில் CrPC 144 பிரிவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி:

டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை நீட்டித்து, சமூக மற்றும் கலாச்சாரக் கூட்டங்களை டிசம்பர் 31 நள்ளிரவு வரை தடை செய்துள்ளது. பார்கள் மற்றும் உணவகங்களில் இருக்கை வசதி 50 சதவீதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. தற்போதைய கட்டுப்பாடுகள் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ம் தேதி இரவு வரை தொடரும். தவிர அரசியல், சமூக, கலாச்சார, மத மற்றும் பிற கூட்டங்கள் இன்னும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!