ஜூன் 26 வரை இரவு நேர ஊரடங்கு அமல் – பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி!

0
ஜூன் 26 வரை இரவு நேர ஊரடங்கு அமல் - பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி!
ஜூன் 26 வரை இரவு நேர ஊரடங்கு அமல் - பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி!
ஜூன் 26 வரை இரவு நேர ஊரடங்கு அமல் – பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி!

கொரோனா பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு குஜராத் மாநில அரசு வருகிற ஜூன் 26ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவித்து உள்ளது. மேலும் பல்வேறு தளர்வுகளையும் அமல்படுத்தியுள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்:

குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி அவர்களின் தலைமையில் முக்கிய கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் மாநிலத்தில் புதிய COVID-19 கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் வைரஸ் பரவாமல் தடுக்க, ஜூன் 26 வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன் 11ம் தேதி முதல் 26 வரை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் ஹோட்டல்கள் இயங்கலாம். இரவு 9 மணி வரை பார்சல் சேவைகளை வழங்கலாம். இரவு 12 மணி வரை வீட்டு டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 14க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!

ஜூன் 26 வரை ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இந்த காலகட்டத்தில் அனைத்து கடைகள், லாரிகள், வணிக வளாகங்கள், சந்தைகள், சலூன்கள், அழகு நிலையங்கள் மற்றும் பிற வணிக நடவடிக்கைகள் தொடர்ந்து காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை தொடரலாம், அதாவது தற்போதுள்ள கால வரம்பை 1 மணி நேரம் நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த காலகட்டத்தில் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் நூலகமும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். மேலும் 50 சதவிகிதம் பேருடன் உடற்பயிற்சி நிலையங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசியல், மத, கலாச்சார நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 20 நபர்களுக்குள் நடத்தப்படலாம். மாநிலத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் 50 சதவீத பக்தர்களுடன் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மற்றும் எஸ்.டி பேருந்துகள் போன்ற பொது பேருந்து போக்குவரத்து சேவைகள் 60% பயணிகள் எண்ணிக்கையுடன் செயல்படலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!