பிப்ரவரி 11 வரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
பிப்ரவரி 11 வரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
பிப்ரவரி 11 வரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
பிப்ரவரி 11 வரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

குஜராத் மாநிலத்தில் கொரோனா 3ம் அலைத்தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் பிப்ரவரி 11 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

ஊரடங்கு நீட்டிப்பு

தற்போது மாநிலம் முழுவதும் காணப்பட்டு வரும் கொரோனா புதிய பாதிப்புகளை கவனத்தில் கொண்ட குஜராத் அரசாங்கம், கொரோனா 3ம் அலைத்தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை பிப்ரவரி 11 வரை தொடர முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக குஜராத் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மாநிலம் முழுவதும் தினமும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் இரவு ஊரடங்கு உத்தரவு பிப்ரவரி 11 வரை தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சிறப்பு அனுமதி விபரங்கள்!

இதற்கு முன்னதாக ஜனவரி மாத துவக்கத்தில் குஜராத்தின் 8 முக்கிய நகரங்களில் விதிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு உத்தரவு இன்னும் 17 நகரங்களில் அமல்படுத்தப்பட்டது. இதனுடன் பள்ளிகள் அடைக்கப்பட்டு, அன்றாட நிகழ்வுகளுக்கும் அரசு சில தடைகளை விதித்திருந்தது. இதற்கிடையில் மத்திய சுகாதார அமைச்சகம், தினசரி கொரோனா புதிய பாதிப்புகள் மற்றும் நேர்மறை விகிதங்களில் குஜராத் மாநிலம் சரிவை பதிவு செய்துள்ளதாகக் கூறியது.

CSK அணியில் இன்னும் 10 வருடங்கள் விளையாடுவேன் – ரவீந்திர ஜடேஜா ட்வீட்! ரசிகர்கள் உற்சாகம்!

இதனை கவனத்தில் கொண்டு, இரவு ஊரடங்கு உத்தரவு தவிர மற்ற செயல்பாடுகளுக்கு அரசு தளர்வுகளை அளிக்க முன்வந்துள்ளது. அதன் படி, மூடிய இடங்களில் நடைபெறும் திருமண விழாக்களில் 150 பேரும், திறந்த வெளியில் நடக்கும் திருமணங்களில் 300 பேரும் கலந்து கொள்ளலாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், பிப்ரவரி 5 வரை 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் குஜராத்தில் கடந்த 2 நாட்களாக 8,000க்கும் குறைவான புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here