தமிழகத்தில் ஓமிக்ரான் பரவலை தடுக்க இரவு ஊரடங்கு அமல்? முதல்வர் தீவிர ஆலோசனை!

0
தமிழகத்தில் ஓமிக்ரான் பரவலை தடுக்க இரவு ஊரடங்கு அமல்? முதல்வர் தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் ஓமிக்ரான் பரவலை தடுக்க இரவு ஊரடங்கு அமல்? முதல்வர் தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் ஓமிக்ரான் பரவலை தடுக்க இரவு ஊரடங்கு அமல்? முதல்வர் தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அடுத்தடுத்து வரும் பண்டிகை நாட்கள் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

முதல்வர் ஆலோசனை:

கடந்த ஆண்டுகளாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை விட அதிக பாதிப்புகளை கொண்ட ஓமிக்ரான் தொற்று கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே மாதத்தில் அந்த வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் பல மாநிலங்களில் பரவி வருகிறது. அதனால் நேற்று பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் மாநில அரசுகள் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முன்வர வேண்டும் என அறிவித்திருந்தார்.

Vijay Hazare Trophy அரையிறுதி போட்டி – தமிழ்நாடு அணிக்கு 311 ரன்கள் இலக்கு!

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து முதல் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி இரவு ஊரடங்கு அமல்படுத்தலாமா என அந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

TNPSC தேர்வு பாடத்திட்டத்தில் திருக்குறள் முழுவதும் நீக்கம் – சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி!

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. மேலும் அடுத்து புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் பொது இடங்களில் மக்கள் கூடாத வண்ணம் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புத்தாண்டு நள்ளிரவு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது, அரசியல் சமுதாய நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உத்திர பிரதேசம் உள்ளிட்ட 2 மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here