சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் இரவு நேர கட்டுப்பாடு – பிப்.10ம் தேதி முதல் அமல்!

0
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் இரவு நேர கட்டுப்பாடு - பிப்.10ம் தேதி முதல் அமல்!
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் இரவு நேர கட்டுப்பாடு - பிப்.10ம் தேதி முதல் அமல்!
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் இரவு நேர கட்டுப்பாடு – பிப்.10ம் தேதி முதல் அமல்!

தமிழகத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் இரவு நேரத்தில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க தற்போது நேர கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இதனை வருகிற பிப்ரவரி 10ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர கட்டுப்பாடு:

தமிழகத்தில் வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சரணாலயங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக புலிகளை பாதுகாக்கும் வகையில் சத்தியமங்கலத்தில் புலிகள் சரணாலயம் 1411.6 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இது தமிழகத்தின் மிகப்பெரிய புலிகள் காப்பகமாகும். இதையடுத்து இந்த சரணாலயம் வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களால் பல விலங்குகள் இறந்துள்ளனர். அதன்படி 2012 முதல் 2021 வரை 155 விலங்குகள் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

அதனால் இந்த விபத்துகள் ஏற்படாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதன்படி இந்த விசாரணை வந்த போது, வனத்துறை சார்பாக கூறியதாவது, கடந்த 2019ம் ஆண்டு ஈரோடு ஆட்சியர் சரணாலய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்தார். ஆனால் இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் இதனை அமல்படுத்தவில்லை என்று வனத்துறை தெரிவித்தனர். இதற்கு நீதிபதிகள் பதிலளித்தாவது, பொதுமக்கள் ஏற்று கொள்ளவில்லை என்றாலும் இதனை அமல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அமலாகும் பழைய ஓய்வூதிய திட்டம்?

இதையடுத்து இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். அதனால் இதனை வருகிற 10ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதன்படி சத்தியமங்கலம் புலிகள் சரணாலய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை அமல்படுத்த வேண்டும் என்று வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஈரோடு ஆட்சியர் உத்தரவை அமலப்படுத்தாது குறித்து தகுந்த விளக்கத்தை தர வேண்டும் என்று வனத்துறைக்கு உத்தரவு அளித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!