NIFT தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்வு!!

0
NIFT தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்வு!!
NIFT தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்வு!!NIFT தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்வு!!
NIFT தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு – பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்வு!!

மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் நடத்தும் ‘நிஃப்ட்’ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

NIFT தேர்வு ஹால் டிக்கெட்:

நிஃப்ட் எனப்படும் தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை ஃபேஷன் டெக்னாலஜி மற்றும் இளங்கலை வடிவமைப்பு உள்ளிட்ட ஏராளமான படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையில் எம்.டெக் மாணவர் சேர்க்கை ரத்து – ஐகோர்ட் கேள்வி!!

நிஃப்ட் தேர்வுக்கான கல்வி நிறுவனங்கள் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு உட்பட நாட்டின் 16 முக்கிய நகரங்களில் உள்ளன. மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் 2,370 இடங்களை நிரப்ப தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு பிப்ரவரி 14 ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதற்காக 32 மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள் இடஒதுக்கீடு முறை மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் – யுஜிசி உத்தரவு!!

நேரடியாக நடத்தப்படும் இந்த தேர்வுக்கு மத்திய அரசு வெளியிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இந்த தேர்வில் கலந்துகொள்ள மாணவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்குவது கட்டாயம் ஆகும். 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும், பொறியியல் பட்டயப் படிப்பு முடித்தவர்களும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

என்எல்சி நிறுவன பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு – தேர்வர்கள் அதிர்ச்சி!!

இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெற https://applyadmission.net/nift2021/NIFT_AdmitCard_2021.asp இணையதளத்தை காணலாம். இந்த தேர்வுகள் இரண்டு பிரிவுகளாக நிஃப்ட் படைப்பாற்றல் திறன் தேர்வு (NIFT CAT) மற்றும் நிஃப்ட் பொதுத் திறன் தேர்வு (NIFT GAT) என நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!