NIELIT தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை – ரூ.1 லட்சத்துக்கு மேல் ஊதியம்..!
தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIELIT) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Scientist-‘E’ & Scientist-‘F’ பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களையும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Institute of Electronics & Information Technology (NIELIT) |
பணியின் பெயர் | Scientist-‘E’ & Scientist-‘F’ |
பணியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NIELIT காலிப்பணியிடம்:
Scientist ‘E’ பணிக்கு 03 பணியிடம் மற்றும் Scientist ‘F’ பணிக்கு 03 பணியிடம் என மொத்தமாக 06 பணியிடங்கள் மட்டும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.
Scientist கல்வி தகுதி:
Scientist-‘E’ மற்றும் Scientist ‘F’ பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B.Tech முடித்திருக்க வேண்டும் அல்லது Associate Member of Institute of Engineers (A&B) ஆக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது Physics / Electronics / Applied Electronics பாடப்பிரிவில் Master டிகிரி முடித்திருக்க வேண்டும்.
NIELIT வயது வரம்பு:
08.06.2022 ம் தேதியின் படி, Scientist-‘E’ பணிக்கு 45 வயதும், Scientific ‘F’ பணிக்கு 50 வயதும் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Scientist அனுபவ விவரங்கள்:
Scientist-‘E’ மற்றும் Scientist ‘F’ பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 13 வருடங்கள் முதல் 19 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
NIELIT ஊதிய விவரம்:
Scientist ‘E’ பணிக்கு தேர்வாகும் நபர்கள் Level 13 என்கிற அரசு ஊதிய அளவின்படி, குறைந்தது ரூ.1,23,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,15,900/- வரை ஊதிய தொகை வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
Scientist ‘F’ பணிக்கு தேர்வாகும் நபர்கள் Level 13A என்கிற அரசு ஊதிய அளவின்படி, குறைந்தது ரூ.1,31,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,16,600/- வரை ஊதிய தொகை வழங்கப்படும்.
Scientist விண்ணப்ப கட்டணம்:
SC / ST / PWBD / Women விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400/- மற்றும் பொது பிரிவு & மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
NIELIT தேர்வு முறை:
Certificate Verification.
Interview.
Scientist விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 08.06.2022 அன்றைய நாள் வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.