NHAI நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – விண்ணப்பங்கள் வரவேற்பு !

0
NHAI நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - விண்ணப்பங்கள் வரவேற்பு !
NHAI நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி - விண்ணப்பங்கள் வரவேற்பு !
NHAI நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – விண்ணப்பங்கள் வரவேற்பு !

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Manager, Assistant Manager, Parliament Assistant ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Highway Authority of India (NHAI)
பணியின் பெயர் Manager, Assistant Manager, Parliament Assistant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காலிப்பணியிடங்கள்:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) காலியாக உள்ள Manager (Information Technology) பணிக்கு 02 பணியிடங்கள் வீதமும், Assistant Manager / Parliament Assistant பணிகளுக்கு தலா 01 பணியிடம் வீதமும் என மொத்தமாக 04 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
NHAI கல்வித் தகுதி:
  • Manager (Information Technology) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Information Technology போன்ற பாடப்பிரிவில் B.E / B.Tech, B.Sc, BCA, M.Sc, MCA, MBA Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.
  • Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree படித்தவராக இருக்க வேண்டும்.
  • Parliament Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree படித்தவராக இருக்க வேண்டும்.
NHAI அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில / PSU போன்ற அரசு நிறுவனங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய துறைகளில் ஒத்த (Analogous Post) அல்லது வழக்கமான (Regular Basic) பதவிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ் குறைந்தது 3 வருடங்கள் முதல் அதிகபட்சம் 9 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

NHAI வயது வரம்பு:
  • Manager (Contract Basic) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 48 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Manager (Deputation Basic) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Assistant Manager, Parliament Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
NHAI சம்பளம்:
  • Manager (Information Technology) பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது PB-3 (Rs.15600 –
    39100) with Grade Pay Rs.6600/- என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.
  • Assistant Manager பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது PB-2 (Rs.9300-34800) with Grade Pay Rs.4800/- என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.
  • Parliament Assistant பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது PB-2 (Rs.9300-34800) with Grade Pay Rs.4200/- என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

NHAI தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NHAI விண்ணப்பிக்கும் விதம்:
  • இந்த NHAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை (03.08.2022) என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
  • மேலும் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு (18.08.2022) என்ற இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

NHAI Notification Link

NHAI Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!