நெடுஞ்சாலை ஆணையத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை ரெடி – நாளை விண்ணப்பிக்க இறுதி நாள்..!

0
நெடுஞ்சாலை ஆணையத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை ரெடி - நாளை விண்ணப்பிக்க இறுதி நாள்..!
நெடுஞ்சாலை ஆணையத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை ரெடி - நாளை விண்ணப்பிக்க இறுதி நாள்..!
நெடுஞ்சாலை ஆணையத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை ரெடி – நாளை விண்ணப்பிக்க இறுதி நாள்..!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பில் Deputy General Manager, General Manager, Manager ஆகிய பணிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 80 பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 02.05.2022 என்ற கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை மிக எளிமையாக இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வெளியிட்ட அறிவிப்பில் General Manager- Technical (Deputation) பணிக்கு என 15 இடமும், Deputy General Manager (Technical) பணிக்கு என 26 இடமும், Manager (Technical) பணிக்கு என 31 இடமும் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் Civil Engineering பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு / மாநில அரசு / யூனியன் பிரதேசங்களில் / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவங்கள் parent cadre அல்லது துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளாக இருக்கலாம். இந்த அதிகாரிகள் குறைந்தது 09 ஆண்டுகள் Pay level 10 of Pay Matrix (Rs.56,100/- to 1,77,500/-) அல்லது அதற்கு மேல் உள்ள பதவிகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றி அறிவிப்பில் காணலாம். General Manager பணிக்கு Level-13 (ரூ.1,23,100- 2,15,900) / (pre revised) PB-4 (ரூ.37,400- 67,000) என்கிற ஊதியத்துடன் Grade Pay Rs.8,700/- வழங்கப்படும். Deputy General Manager (Technical) பணிக்கு Level-12 (ரூ.78,800- 2,09,200)/(pre revised) PB-3 (ரூ.15,600-39,100) என்கிற ஊதியத்துடன் Grade Pay Rs.7,600/- வழங்கப்படும். Manager (Technical) பணிக்கு Level-11 (ரூ.67,700- 2,08,700) / (pre revised) PB-3 (ரூ.15,600-39,100) என்கிற ஊதியத்துடன் Grade Pay of Rs.6600/- வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test & Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். நாளை (02.05.2022) Deputation பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள், எனவே விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NHAI Notification Link

NHAI Application Link

 NHAI Official Website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!