விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் தற்போது பாரதி DNA டெஸ்ட் எடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அதை பற்றி கதை கொண்டு செல்வது போல தெரியவில்லை. இதனால் அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது இரு விதமான கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் குழந்தைகளுக்கு உண்மை தெரிய வருவது போல காட்டப்பட்டாலும் அதை தெரிய விடாமல் சௌந்தர்யா தடுத்து வருகிறார். மேலும், லக்ஷ்மிக்கு உண்மை தெரிந்தாலும் அவரை சொல்ல கூடாது என தடுத்து வைத்துள்ளதும் சௌந்தர்யா தான். இதற்கிடையே மருத்துவமனை காட்சிகள் எதற்கு என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வெண்பா ரோஹித் காதல் காட்சிகளுடன் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து ரோஹித் வெண்பாவை ஏமாற்றி கொண்டிருக்க இவ்வளவு சீக்கரம் வெண்பாவிற்கு உண்மை தெரிந்து விட்டதால் இருவரும் ஜோடியாக மாறுவார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் வெண்பாவிற்கு திருமணம் முடிந்துவிடும், இதனால் கதையில் திருப்பம் வரும் என ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சமானது.
புது வீட்டிற்கு செல்லும் குஷியில் கதிர் & முல்லை, ஆசிர்வதிக்கும் தனம் – ப்ரோமோ ரிலீஸ்!
இந்நிலையில், கடைசியாக இனி வரும் எபிசோடுகளில் பாரதி DNA டெஸ்ட் எடுக்காமலே கண்ணம்மாவை புரிந்து கொள்வார் எனவும், அதனால் கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்துவிடுவார்கள் எனவும், அவ்வாறு சேர்ந்த பின் பாரதி DNA டெஸ்ட் எடுக்க அவருக்கு தெளிவான உண்மை தெரிய வர, தான் தப்பு செய்துள்ளதாக உணர்ந்துவிட இப்படி தான் கதை கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதெல்லாம் நடக்க இன்னும் பல எபிசோடுகள் ஆகும் என தெளிவாக தெரிய வருகிறது.