பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி மகா சங்கமத்தில் அடுத்த ட்விஸ்ட் – ரசிகர்கள் ஷாக்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி மகா சங்கமத்தில் அடுத்த ட்விஸ்ட் - ரசிகர்கள் ஷாக்!
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி மகா சங்கமத்தில் அடுத்த ட்விஸ்ட் - ரசிகர்கள் ஷாக்!
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி மகா சங்கமத்தில் அடுத்த ட்விஸ்ட் – ரசிகர்கள் ஷாக்!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லைக்கு தற்போது தான் சிகிச்சை தோல்வியடைந்துள்ளது. இந்த துயரத்தில் இருந்து முல்லையை வெளியே அழைத்து வர ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முல்லைக்கு 5 லட்சம் செலவு செய்து செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை செய்தனர். ஆனால் அந்த சிகிச்சை முல்லைக்கு வெற்றியை கொடுக்கவில்லை. பலரிடம் கடன் வாங்கி வீடு கட்டும் பிளானையும் பாதியிலேயே நிறுத்தி அந்த சிகிச்சையை செய்தாலும் தோல்வி மட்டுமே மிஞ்சியது. இதனால் முல்லை மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் குழந்தை இல்லை என்கிற கவலை மட்டுமே முல்லைக்கு இருந்தது.

Exams Daily Mobile App Download

ஆனால் தற்போது குடும்பத்தில் உள்ளவர்களும் தன்னால் கஷ்டப்படுகிறார்களே என்கிற கவலையில் முல்லை இருக்கிறார். குடும்பத்தினர்களும் 5 லட்சம் வீணாகி விட்டது என நினைக்காமல் முல்லையை அந்த துயரத்தில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என நினைக்கின்றனர். இந்த சமயம் பார்த்து பாக்கியாவிடம் இருந்து தனத்திற்கு கால் வருகிறது. அதாவது ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளை கொண்டாட பாக்கியலட்சுமி குடும்பத்தினர்கள் பிளான் செய்துள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள்.

நடிகை ஆலியா மானசா தனது 2 குழந்தைகளுடன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

வெளியூருக்கு சென்று வந்தால் முல்லை கொஞ்சம் மனசு மாறலாம். இதனால் பாக்கியலட்சுமி குடும்பத்துடன் இணைய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தயாராகி கொண்டிருக்கிறது. இந்த வாரம் இரண்டு சீரியலின் மகா சங்கமம் நடைபெற இருப்பதால் கோபியை பற்றிய உண்மைகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள யாருக்காவது தெரிய வாய்ப்பிருக்கிறது மற்றும் எழில், அம்ரிதாவின் கல்யாணம் குறித்தான பேச்சுக்கள் எழ வாய்ப்பிருக்கிறது. புதிதாக என்ன மாற்றத்தை கொண்டு வரப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here