தமிழகத்தில் ஜூலை 5க்கு மேல் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள் – வெளியான தகவல்கள்!

1
தமிழகத்தில் ஜூலை 5க்கு மேல் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள் - வெளியான தகவல்கள்!
தமிழகத்தில் ஜூலை 5க்கு மேல் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள் - வெளியான தகவல்கள்!
தமிழகத்தில் ஜூலை 5க்கு மேல் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள் – வெளியான தகவல்கள்!

தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை காரணமாக கடந்த மே மாதம் முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஜூலை 5க்கு மேல் நீட்டிக்கப்பட்டால் என்னென்ன தளர்வுகள் கொடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்

தமிழகத்தில் கொரோனா பேரலை தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு உத்தரவானது கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் விதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 2 மாதங்களாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த பொது முடக்கமானது ஜூலை 5 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்த நிலையில் கடந்த 3 வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பின் விகிதம் சரிந்து வந்ததால், முழு ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள், சலூன்கள், காலணி கடைகள், மதுக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு? மாணவர்கள் எதிர்பார்ப்பு!

மேலும் அரசு அலுவலகங்கள், தனியார் தொழில்துறை நிறுவனங்கள், புதிய மாணவர் சேர்க்கைக்காக பள்ளிகள் கூட திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி முதல் 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கத்திற்கும் அரசு அனுமதி கொடுத்துள்ளது. தொடர்ந்து ஜூலை 5 ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நாளை (ஜூலை 2) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதில் இதுவரை தளர்வுகள் அளிக்காத ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து இயங்க அனுமதிக்கலாம் என கூறப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மீண்டுமாக திறக்கப்படலாம் எனவும் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி கொடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களிலும் மால்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை திறக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தவிர அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளுக்கு கூடுத நேர அனுமதி வழங்கப்படலாம் என தெரிகிறது. எனினும் இது குறித்த முறையான அறிவிப்புகள், முதல்வரின் ஆலோசனைக்கு பின்னாக வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Dear sirs,
    When ever we open Samayam Tamil news in mobile we find an advertisement from MY FIRSTMOBILE.IN about their product of KROMX mobile and tablet at very throw away prices which are attractive,if any one books such tablet for rs 3800 they accept the order and they send promptly one parcel which contains a filthy third rated China mobile.
    They can not be contacted through their given phone number or through given email As such it is understood that this is a gang operated to cheat the middle class people who can not get their money back.
    Their given pH.no. 9953105275
    Their email is. :[email protected]
    Since I am one of the sufferer who has lost around rs 3890 I would like your good self to investigate and stop their advertisement in the public interest.
    A word of acknowledging this email would show your interest in public welfare.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!