வங்கிகளுக்கு அடுத்த 6 நாட்கள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
வங்கிகளுக்கு அடுத்த 6 நாட்கள் விடுமுறை - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
வங்கிகளுக்கு அடுத்த 6 நாட்கள் விடுமுறை - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
வங்கிகளுக்கு அடுத்த 6 நாட்கள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே மொத்தமாக 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அடுத்த வாரத்தில் மட்டுமே ரக்ஷா பந்தன், முஹர்ரம் போன்ற பண்டிகைகள் வருவதால் 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் தான் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு வங்கிகளுக்கும் எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் அறிவித்து வருகின்றன. மற்ற மாதங்களை விட ஆகஸ்ட் மாதத்தில் அதிக பண்டிகை தினங்கள் இருப்பதால் வார இறுதி நாட்களையும் சேர்த்து மொத்தமாக 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆகஸ்ட் முதல் வாரத்தில் மட்டுமே மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

Exams Daily Mobile App Download

அதே போல, இரண்டாவது வாரத்தில் வார இறுதி நாட்களையும் சேர்த்து 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பண்டிகை தின விடுமுறை எந்தெந்த மாநிலங்களில் அந்த பண்டிகை தினம் கொண்டாடப்படுகிறதோ அந்த மாநிலங்களில் மட்டுமே விடப்படுகிறது. ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ரக்ஷா பந்தன், முஹர்ரம் போன்ற பண்டிகைகள் வருவதால் ஆகஸ்ட் 8, 9, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய ஆறு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்துள்ள பண்டிகை தின விடுமுறைகளை பார்க்கலாம்,

  • ஆகஸ்ட் 1: Drukpa Tshe-zi காரணமாக காங்டாக்கில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • ஆகஸ்ட் 8: முஹர்ரம் (அஷூரா) காரணமாக ஜம்மு, ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • ஆகஸ்ட் 9: முஹர்ரம் (ஆஷூரா) காரணமாக அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ராஞ்சி ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • ஆகஸ்ட் 11: ரக்ஷா பந்தன் காரணமாக அகமதாபாத், போபால், டேராடூன், ஜெய்ப்பூர் மற்றும் சிம்லா ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • ஆகஸ்ட் 12: ரக்ஷா பந்தன் காரணமாக கான்பூர் மற்றும் லக்னோ ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை

  • ஆகஸ்ட் 13: தேசபக்தர் தினம் காரணமாக இம்பால் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • ஆகஸ்ட் 16: பார்சி புத்தாண்டு (ஷாஹேன்ஷாஹி) காரணமாக பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • ஆகஸ்ட் 18: ஜன்மாஷ்டமி காரணமாக புவனேஸ்வர், டேராடூன், கான்பூர் மற்றும் லக்னோ ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • ஆகஸ்ட் 19: ஜன்மாஷ்டமி (ஷ்ரவன் வத்-8), கிருஷ்ண ஜெயந்தி காரணமாக அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை, காங்டாக், ஜெய்ப்பூர், ஜம்மு, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் சிம்லா ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • ஆகஸ்ட் 20: ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி காரணமாக ஹைதராபாத் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • ஆகஸ்ட் 29: ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி காரணமாக கவுகாத்தி பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • ஆகஸ்ட் 31: சம்வத்சரி (சதுர்த்தி பக்ஷா), கணேஷ் சதுர்த்தி, வரசித்தி விநாயக விரதம், விநாயகர் சதுர்த்தி காரணமாக அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் மாதத்தில் உள்ள வார இறுதி விடுமுறைகளை பார்க்கலாம்,

  • ஆகஸ்ட் 7: ஞாயிறு விடுமுறை
  • ஆகஸ்ட் 13: இரண்டாவது சனிக்கிழமை + தேசபக்தர் தினம்
  • ஆகஸ்ட் 14: ஞாயிறு விடுமுறை
  • ஆகஸ்ட் 21: ஞாயிறு விடுமுறை
  • ஆகஸ்ட் 27: நான்காவது சனிக்கிழமை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!