தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

தமிழகம், புதுவையில் ஜூன் 30 வரை அதாவது இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழை அளவு குறித்த விபரங்களும் வெளியாகியுள்ளது.

வானிலை அறிக்கை:

மேற்குதிசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஜூன் 28ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதை தொடர்ந்து 29.06.2022, 30.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

கடந்த 24 மணி நேரத்தில்‌ அதிகபட்சமாக இன்னக்கல்லார்‌ (கோயம்புத்தூர்‌) 5 செமீ மற்றும் குறைந்தபட்சமாக வட்‌ பிரையர்‌ எஸ்டேட்‌ நீலகிரியில் 1 செமீ மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

26.06.2022 முதல்‌ 28.06.2022 வரை: குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, தென்‌ தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தென்மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. கர்நாடக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!