பள்ளி & கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!

0
பள்ளி & கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு!
பள்ளி & கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு!
பள்ளி & கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!

கேரளாவில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஓணம் பண்டிகை

கேரள மாநிலத்தில் பாரம்பரிய பண்டிகைகளில் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளாவில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திர நாளில் மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய நாட்டையும், நாட்டு மக்களையும் பார்ப்பதற்காக வருவார் என்பது ஐதீகம். இதற்காக இங்குள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையானது சாதி, மத பேதமின்றி அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக ஓணம் பண்டிகை மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என தொடர்ச்சியாக வரும் 10 நட்சத்திர தினத்தன்று பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகை தினத்தன்று வெளியூர் அல்லது வெளி மாநிலங்களில் வசிக்கும் கேரள மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு வந்து கொண்டாடுவார்கள். அதனால் பொதுமக்கள் அனைவரும் இப்பண்டிகையை சிறப்பாக கொண்டாட கேரள அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

TCS நிறுவன ஊழியர்களுக்கான அறிவிப்பு – முடிவுக்கு வரும் WFH!

அதாவது மாணவர்கள் அனைவரும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாநிலத்தில் செயல்படும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விடுமுறைக்கு முன்பாக மாணவர்களுக்கு தேர்வுகள் முடிக்கப்பட வேண்டும் என்று கடந்த 24ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் விரைவில் முடிக்கப்பட்டு மாணவர்கள் சிறப்பாக ஓணம் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here