பாகிஸ்தான் தொடரை ரத்து செய்த நியூசிலாந்து – கடைசி நிமிட முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

0
பாகிஸ்தான் தொடரை ரத்து செய்த நியூசிலாந்து - கடைசி நிமிட முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!
பாகிஸ்தான் தொடரை ரத்து செய்த நியூசிலாந்து - கடைசி நிமிட முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பாகிஸ்தான் தொடரை ரத்து செய்த நியூசிலாந்து – கடைசி நிமிட முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை, போட்டி துவங்க இருந்த கடைசி நிமிடத்தில் நியூஸிலாந்து அணி ரத்து செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான்-நியூசிலாந்து போட்டி தொடர்:

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் பல ஆண்டுகளாக போட்டிகளில் நேரிடையாக மோதி வருகின்றன. ஆனால் அவை சர்வதேச போட்டி தொடராகவோ அல்லது நியூசிலாந்து நாட்டில் நடக்கும் போட்டி தொடராகவரோ தான் இருக்கும். ஏனென்றால் பாகிஸ்தானில் போட்டிகள் நடத்தப்பட்டால் தீவிரவாதிகளால் அங்கு பாதுகாப்பிற்கு கேள்விக்குறி எழும். இதனால், எந்த கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடுவதை விரும்புவது கிடையாது.

T20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோஹ்லி விலகியது ஏன்? வெளியான பரபரப்பு தகவல்கள்!

நியூஸிலாந்து அணியும் கடந்த 2003ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதற்கு முன்னர் கடந்த 2002ம் ஆண்டில் நியூசிலாந்து அணி வீர்ரகள் கராச்சி நகரில் தங்கியிருந்த ஹோட்டலில் வெடிகுண்டு வெடித்ததையடுத்து, அப்போது தொடரை நியூஸிலாந்து அணி ரத்து செய்தது. அதன்பின் கடந்த 18 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு நியூஸிலாந்து அணி பயணம் செய்யவில்லை.

தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து:

தற்போது பாகிஸ்தான் பயணம் வீரர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லை என நியூசிலாந்து அரசு அறிவுறுத்தியதையடுத்து, தற்போது ராவல்பிண்டியில் தொடங்க இருந்த முதல் ஒருநாள் போட்டியினை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது. இந்த தொடர் ரத்து செய்யப்பட்டது அடுத்து நடக்க இருக்கும் இங்கிலாந்து-பாகிஸ்தஹ்ன் கிரிக்கெட் தொடரையும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

IPL திருவிழா 2021: முதல் கோப்பையை உச்சி முகரும் வேட்கையில் பஞ்சாப் கிங்ஸ் படை!!

பாகிஸ்தான் அரசு செய்த பாதுகாப்பு ஏற்பாடுகளை நியூஸிலாந்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுசெய்து மனநிறைவு அடைந்த பின்பு தான் தொடருக்கு நியூஸிலாந்து வீரர்கள் வந்தனர் என முன்னர் தெரிவிக்கப்பட்டு குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here