ஆதார் எண் இணைப்பு & புதிய விடைத்தாள் விபரங்கள் – TNPSC முக்கிய அறிவிப்பு!!
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து இருப்பவர்கள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே நுழைவுச்சீட்டை பெற முடியும் என TNPSC அறிவித்துள்ளது. மேலும் ஆதார் எண் இணைப்பது மற்றும் புதிய விடைத்தாளை கையாளுவது குறித்து விளக்கங்களை பெற கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியிட்டுள்ளது.
Download TNPSC Group 1 Hall Ticket 2020
தமிழக அரசு அலுவலக பணியாளர்களை, அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்கிறது. இதற்காக போட்டித்தேர்வுகள் நடத்தப்படும். அதன் அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். போட்டித்தேர்வுகளின் விடைத்தாளானது ஓ.எம்.ஆர் முறைப்படி இருக்கும்.
கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்?? உயர்கல்வித்துறை முக்கிய ஆலோசனை!!
வருகின்ற ஜனவரி 3ம் தேதி குரூப் -1 தேர்வு நடைபெறும் நிலையில் விண்ணப்பத்தார்கள் தங்களது ஒரு முறை பதிவு எண் /நிரந்தரப்பதிவு எண் உடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே நுழைவுசீட்டை பெற முடியும் என TNPSC அறிவித்துள்ளது. மேலும் தேர்வாணையம் ஏற்கனவே இனி வரும் தேர்வுகளுக்கு வழங்கப்படவுள்ள ஓ.எம்.ஆர் படிவம் புதிய பல சிறப்பம்சங்களுடன் இருக்கும் என அறிவித்தது. அதே போல் இம்முறை வழங்கப்பட உள்ள விடைத்தாள் படிவம் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து தேர்வர்களும் ஆதார் எண்ணை இணைப்பதிலும் ,ஹால் டிக்கெட் பெற முயற்சிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் ஆதார் எண் இணைப்பது மற்றும் புதிய விடைத்தாளை பற்றிய சந்தேகங்களுக்காக 1800- 425 -1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு வரும் 08.01.2021 வரை தெரிந்து கொள்ளலாம்.
பூஜ்ய கல்வியாண்டாக நடப்பு ஆண்டை அறிவிக்க திட்டம்?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
TNPSC -ன் மின்னஞ்சல் முகவரியான [email protected] என்ற தளத்தில் உரிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் புதிய விடைத்தாள் குறித்தான குறும்படம் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது சந்தேகங்களை அதில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி சரியான முறையில் தேர்வை அணுகுமாறு கூறப்பட்டுள்ளது.
Check Press Notice
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
B.sc(agri) finish panna vangaliku job eruka?