IPL 2021: பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்கப் போவது யார்? MI vs PBK இன்று மோதல்!

0
IPL 2021 பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்கப் போவது யார் MI vs PBK இன்று மோதல்!
IPL 2021 பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்கப் போவது யார் MI vs PBK இன்று மோதல்!

IPL 2021: பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்கப் போவது யார்? MI vs PBK இன்று மோதல்!

ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளன. அதற்கான வெற்றி வாய்ப்பு விகிதங்கள் மற்றும் அணி விவரம் குறித்த அலசலை இங்கு காணலாம்.

MI vs PBKS இன்று பலப்பரீட்சை:

ஐபிஎல்லில் இன்று நடக்க உள்ள 42வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் கோதாவில் மல்லுக்கட்ட உள்ளன. இரண்டு அணிகளுமே பட்டியலில் சம நிலையில் உள்ளது. இதுவரை 4 வெற்றி, 6 தோல்வியுடன் உள்ள மும்பை அணி இந்த இரண்டாம் கட்டம் தொடங்கியது முதல் இன்னும் தோல்வியையே சந்தித்து வருகிறது. வரிசையாக சென்னை, கொல்கத்தா, பெங்களூர் அணிகளுக்கு எதிராக நல்ல நிலையில் இருந்து பின் தோல்வியின் பக்கம் சென்று விடுகிறது. அந்த அணியின் ஆட்டம் ஒரு சேர கிளிக் ஆகாமல் இருப்பதே அதன் தோல்விக்கு காரணமாகும்.

IPL 2021: KKR vs DC இன்று பலப்பரீட்சை! பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

இன்றைய ஆட்டத்தில் சிறு சிறு தவறுகளை சரி செய்து காலம் கண்டால் மட்டுமே வெற்றியை அடைய முடியும். அதே போல் பஞ்சாப் அணியும் இதுவரை 4 வெற்றி, 6 தோல்வியுடன் உள்ளது. எஞ்சியுள்ள ஆட்டங்கள் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை நினைத்து பார்க்க முடியும் என்பதனால் கட்டாயம் வெற்றி பெற நிலையில் உள்ளது. பஞ்சாப் அணியின் பலவீனமே அதன் பவுலிங் தான். பேட்டிங்கில் இமாலய ஸ்கோர் குவித்தாலும் மோசமான பந்து வீச்சின் காரணத்தினால் தோல்வி அடைகிறது.

கடைசியாக ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதால் அந்த நம்பிக்கையுடன் இன்று களமிறங்கும். இரு அணிகளுக்கும் இது வாழ்வா? சாவா? ஆட்டம் என்பதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய போட்டியில் பஞ்சாப் அணி 9 விக்கெட் விதியசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

ICC டி20 உலகக்கோப்பை போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி – பிசிசிஐ கோரிக்கை!

பிட்ச் ரிப்போர்ட்:

இன்றைய போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த மைதானம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக விளங்கி வருவதால் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக மைதானம் விளங்கும். இவ்விரு அணிகள் இதுவரை 27 முறை மோதியுள்ளது. அதில் மும்பை அணி 14 முறையும், பஞ்சாப் அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு இல்லை.

உத்தேச 11 அணி விவரம்:
  • மும்பை இந்தியன்ஸ் – குயின்டன் டி காக் (wk), ரோஹித் சர்மா (சி), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கீரன் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்
  • பஞ்சாப் கிங்ஸ் – கே எல் ராகுல் (C & wk), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஏடன் மார்க்ரம், நாதன் எல்லிஸ், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங்
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!