IPL 2021: CSK vs KKR – 2 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை த்ரில் வெற்றி!!

0
IPL 2021 CSK vs KKR - 2 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை த்ரில் வெற்றி!!
IPL 2021 CSK vs KKR - 2 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை த்ரில் வெற்றி!!

IPL 2021: CSK vs KKR – 2 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை த்ரில் வெற்றி!!

பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதன் மூலம் பிளே ஆப் வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்து விட்டது.

சென்னை த்ரில் வெற்றி!

கொல்கத்தா-சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுர். அதன்படி, கொல்கத்தா அணிக்கு சுப்மன் கில் 9 ரன்களில் (5 பந்துகள், 2 பவுண்டரி) ரன் அவுட் ஆகினார்.

IPL 2021: RCB vs MI – டாஸ் வென்றது மும்பை! பவுலிங் தேர்வு!!

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் 18 ரன்கள் (15 பந்துகள், 3 பவுண்டரி) மற்றும் கேப்டன் மோர்கனும் (8) நிலைக்கவில்லை. அதிரடி கட்டிய திரிபாதி 45 ரன்கள் (33 பந்துகள், 4 பவுண்டரி, 1 சிக்ஸர்), ரஸல் 20 ரன்கள், தினேஷ் கார்த்திக் 26 ரன்கள் குவித்தனர். கடைசி நேரத்தில் ரன் குவித்த ராணா 37 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 20 ஒவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 171 குவித்துள்ளது. சென்னை அணி தரப்பில் கேசில்வுட், தாக்குர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போது 172 ரன்களை நோக்கி சென்னை அணி களமிறங்க உள்ளது.

அடுத்து 172 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்கள் (28 பந்துகள், 2 பவுண்டரி, 3 சிக்ஸர்) மற்றும் டு பிளசி 43 ரன்கள் (30 பந்துகள், 7 பவுண்டரி) குவித்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டனர். அடுத்த வந்த மொயீன் அலி தன் பங்கிற்கு 32 ரன்கள் சேர்த்து பெவிலியன் ஆனார். அதன் பின்னர் ராயுடு (10), ரெய்னா (11), கேப்டன் டோனி (1), சாம் கரன் (4) அனைவரும் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

கடைசி நேரத்தில் வான வேடிக்கை காட்டிய ஜடேஜா 8 பந்துகளில் 22 ரன்கள் (2 சிக்ஸர், 2 பவுண்டரி) குவித்து வெளியேறினார். பரபரப்பான இந்த போட்டியில் சென்னை அணி 20 ஒவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!