பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக அறிமுகமாகும் சஞ்சீவ் – ரசிகர்கள் ஷாக்! ப்ரோமோ ரிலீஸ்!

0
பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக அறிமுகமாகும் சஞ்சீவ் - ரசிகர்கள் ஷாக்! ப்ரோமோ ரிலீஸ்!
பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக அறிமுகமாகும் சஞ்சீவ் - ரசிகர்கள் ஷாக்! ப்ரோமோ ரிலீஸ்!
பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக அறிமுகமாகும் சஞ்சீவ் – ரசிகர்கள் ஷாக்! ப்ரோமோ ரிலீஸ்!

பாரதியும் கண்ணம்மாவும் தற்போது ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதால் இருவரும் சேர வாய்ப்பிருக்கிறது என எதிர்பார்த்த சமயத்தில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு கண்ணம்மாவை விட்டு விலகி இருக்கிறார். கண்ணம்மா மீது எந்த தவறும் இல்லை நாம் தான் தவறாக புரிந்து கொண்டு இத்தனை ஆண்டுகளாக கண்ணம்மாவை விலகிவிட்டோம் என பாரதி எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறாரோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!

ஆனால், தற்போது பாரதி என்னதான் கண்ணம்மாவை விட்டு விலக நினைத்தாலும் கண்ணம்மாவை விட்டு விலக முடியாத சூழல் தான் அமைந்து வருகிறது. DNA டெஸ்ட் எடுத்து விட்டால் சீரியலே முடிவடைந்துவிடும். ஆனால், அதை மட்டும் செய்யாமல் சீரியலை இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது சீரியலில் புதிதாக விக்ரம், ஷர்மிளா ஆகிய இரண்டு கதாபாத்திரம் எண்ட்ரியாகியுள்ளனர். ஏற்கனவே கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி சீரியலில் இருந்து விலகினார். இவர் விலகிய பிறகு டிஆர்பியில் பாரதி கண்ணம்மா தொடர் மிகவும் பின்தங்கிவிட்டது. பிறகு எப்படியோ டிஆர்பியில் பாரதி கண்ணம்மா தொடரை முன்னிலைக்குகொண்டுவர சீரியல் குழுவினர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

Exams Daily Mobile App Download

பிறகு அஞ்சலி கதாபத்திரத்தில் நடிக்க வந்த ஸ்வீட்டியும் சீரியலில் இருந்து விலகினார். இவருக்குப் பிறகு அகிலும் சீரியலில் இருந்து விலகினார். வரிசையாக அனைத்து கதாபாத்திரங்களும் சீரியலில் இருந்து விலகியதால் பாரதிகண்ணம்மா சீரியலை பார்க்கவே ரசிகர்கள் எரிச்சலடைந்தனர். தற்போது பாரதி கண்ணம்மா தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பதிலாக திருமதி செல்வம் சீரியல் மூலமாக பிரபலமான சஞ்சீவ் தான் நடிக்க விருக்கிறார். தற்போது வெளியான ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!