பிரதமரின் திருமணம் ஒத்தி வைப்பு – கொரோனா பாதிப்பு எதிரொலி!
நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் மற்றும் அவரது காதலர் கிளார்க் கேஃபோர்ட் இடையேயான திருமணம், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு எதிரொலி:
நியூசிலாந்து நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்பு பல அலைகளாக மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக அங்கு கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அத்தியாவசிய செயல்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு? முக்கிய கோரிக்கை!
தற்போது நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இன்று தனது சொந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார். மேலும் அவர் ஓமைக்ரான் மாறுபாட்டின் அதிக பரவலினால் கோவிட் -19 கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளார். தற்போது கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை புதிதாக அறிவித்துள்ளார். இதனால் தனது திருமணம் நாடு முழுவதும் 100% தடுப்பூசி செலுத்திக் கொள்வது வரை நடக்காது என்று தெரிவித்துள்ளார். தொற்றுநோயின் விளைவாக இதுபோன்ற அனுபவத்தைப் பெற்ற பல நியூசிலாந்து மக்களுடன் தானும் ஒருவராக மாறியுள்ளதாக கூறியுள்ளார்.
அஞ்சலகத்தில் வெறும் 5 ஆண்டுகளில் 6 லட்சம் வரை சேமிப்பு – முழு விவரங்கள் இதோ!
ஓமைக்ரான் தொற்று முந்தைய டெல்டா மாறுபாட்டை விட அதிகமாக பரவக்கூடியது, ஆனால் மக்களை மோசமாக நோய்வாய்ப்படுத்தும் வாய்ப்பு குறைவு. கூட்டத்தின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதோடு, பொதுப் போக்குவரத்திலும் கடைகளிலும் கட்டாயம் முகக்கவசம் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்தபட்சம் அடுத்த மாத இறுதி வரை புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். நியூசிலாந்தில் 15,104 பேருக்கு கோவிட் -19 உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 52 பேர் நோய் பாதிப்பால் உயிழந்துள்ளனர்.