வருமான வரி தாக்கல் செய்ய ஜூன் 7ல் புதிய இணையதளம் – சிறப்பம்சங்கள் என்னென்ன?

0
வருமான வரி தாக்கல் செய்ய ஜூன் 7ல் புதிய இணையதளம் - சிறப்பம்சங்கள் என்னென்ன?
வருமான வரி தாக்கல் செய்ய ஜூன் 7ல் புதிய இணையதளம் - சிறப்பம்சங்கள் என்னென்ன?
வருமான வரி தாக்கல் செய்ய ஜூன் 7ல் புதிய இணையதளம் – சிறப்பம்சங்கள் என்னென்ன?

வருமானவரி தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், வரி தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளத்தை ஜூன் 7ம் தேதி வருமானவரித்துறை அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய இணையதளம்:

முழு ஊரடங்கினால் நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளதால் நிறுவன தலைவர்கள் வருமான வரி செலுத்த ஆதரவாக நடப்பு ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் ஜூலை 31 ம் தேதியாக இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது. மேலும், வருமானவரி தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளத்தையும் ஜூன் 7 ம் தேதி முதல் அறிமுகம் செய்ய இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

ஏற்கனவே வருமானவரி தாக்கல் செய்வதற்கு (www.incometaxindiaefiling.gov.in) என்ற ஒரு இணையதளம் பயன்பாட்டில் இருக்கிறது. புதிதாக (www.incometaxgov.in) என்ற இணையத்தளம் பயன்பாட்டுக்கு வர உள்ளதால் பழைய இணையத்தளம் முழுவதுமாக நீக்கப்பட உள்ளது. மாற்றங்கள் செய்யும் காலமான ஜூன் 1 முதல் 6ம் தேதி வரையில் தளம் முழுமையாக முடக்கப்பட உள்ள காரணத்தால் அதனை பயன்படுத்த முடியாது.

புதிய தளத்தின் மூலம் உடனடியாக ஐடிஆர் அறிக்கையை ஆய்வு செய்யும் சேவையும், விரைவில் ரீபண்ட் செய்யும் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், அப்லோடு செய்யப்பட்டவர் அறிக்கை, நிலுவையில் இருக்கும் பணிகள் என வரி சம்பந்தமான அனைத்தையும் ஒரே டேஷ்போர்டில் பார்க்கும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. புதிய தளத்தில் ITR அறிக்கையைத் ஆப்லைன் மற்றும் ஆன்லைனிலும் தயாரிக்க இலவசமாக சாப்ட்வேர் பயன்படுத்த முடியும்.

தமிழக விவசாயிகளுக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடு – அரசுக்கு கோரிக்கை!!

புதிய இணையதளம் துவங்க பட்ட பின்னர் மொபைல் ஆப் மூலம் வருமானவரி அறிக்கை மற்றும் அனைத்து இணையவழி சேவைகளும் பெற முடியும். புதிய இணையதளத்தின் மூலம் நெட்பேங்கிங் மட்டும் அல்லாமல் யூபிஐ, கிரெடிட் கார்டு, ஆர்டிஜிஎஸ், NEFT என அனைத்து விதமான சேவையும் அறிமுகம் செய்ய வருமானவரித்துறை திட்டமிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!