ஜூலை 1 முதல் புதிய தொழிலாளர் சட்டம் அமல் – ஊழியர்களின் வேலை நேரம், PF & சம்பளத்தில் பெரிய மாற்றம்!

0
ஜூலை 1 முதல் புதிய தொழிலாளர் சட்டம் அமல் - ஊழியர்களின் வேலை நேரம், PF & சம்பளத்தில் பெரிய மாற்றம்!
ஜூலை 1 முதல் புதிய தொழிலாளர் சட்டம் அமல் - ஊழியர்களின் வேலை நேரம், PF & சம்பளத்தில் பெரிய மாற்றம்!
ஜூலை 1 முதல் புதிய தொழிலாளர் சட்டம் அமல் – ஊழியர்களின் வேலை நேரம், PF & சம்பளத்தில் பெரிய மாற்றம்!

மத்திய அரசின் ஆலோசனையின் கீழ் இருக்கும் புதிய தொழிலாளர் குறியீடுகள் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வேலை நேரம், PF மற்றும் ஊதிய முறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.

புதிய தொழிலாளர் சட்டம்:

வரும் ஜூலை 1, 2022 முதல் புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கொள்கை முறை அமல்படுத்தப்பட்டால், அலுவலக ஊழியர்களின் வேலை நேரம், ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்புகள் மற்றும் ஊதியம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். அதாவது, அலுவலக நேரம் மற்றும் PF பங்களிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில் ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்துச்செல்லும் சம்பளம் குறையும். இப்போது நான்கு புதிய தொழிலாளர் குறியீடுகளின் தொகுப்பை விரைவில் அமல்படுத்த அரசாங்கம் ஆலோசித்து வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தீவிரமெடுக்கும் கொரோனா பரவல் – ஜூன் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் அறிவிப்பு!

இந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் நாட்டில் முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று அரசாங்கம் கருதுகிறது. இப்போது புதிதாக இயற்றப்பட்ட தொழிலாளர் குறியீடுகள் ஊதியங்கள், சமூகப் பாதுகாப்பு (ஓய்வூதியம், பணிக்கொடை), தொழிலாளர் நலன், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வேலை நிலைமைகள் (பெண்கள் உட்பட) தொடர்பான சீர்திருத்தங்களின் வரிசையை வகுத்துள்ளது. அந்த வகையில் புதிய தொழிலாளர் சட்டம் அமலுக்கு வந்தால் ஊழியர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை விவரமாக பார்க்கலாம்.

புதிய தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், நிறுவனங்களின் அலுவலக வேலை நேரத்தை கணிசமாக மாற்ற இது அனுமதிக்கும். அந்த வகையில் ஊழியர்கள் அலுவலக வேலை நேரத்தை 8 முதல் 9 மணிநேரத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிக்கலாம். இதன் மூலம் ஊழியர்கள் வாரந்தோறும் மூன்று விடுமுறைகளை அனுபவிக்க முடியும். கூடுதலாக, தொழிற்சாலைகள் முழுவதிலும் ஒரு காலாண்டில் தொழிலாளர்களுக்கான அதிகபட்ச கூடுதல் நேரங்கள் 50 மணிநேரத்திலிருந்து (தொழிற்சாலைச் சட்டத்தின் கீழ்) 125 மணிநேரமாக (புதிய தொழிலாளர் குறியீடுகளில்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளத் தொகை மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கான முதலாளிகளின் பங்களிப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும். அந்த வகையில் புதிய குறியீடுகள் ஊழியரின் அடிப்படை சம்பளத்தை மொத்த சம்பளத்தில் 50% ஆக வைக்கலாம். இது ஊழியர் மற்றும் முதலாளியின் பிஎஃப் பங்களிப்புகளை அதிகரிக்கும். சில ஊழியர்களுக்கு, குறிப்பாக தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளம் குறையும். தொடர்ந்து ஓய்வுக்குப் பிறகு பெறப்படும் பணம் மற்றும் பணிக்கொடைத் தொகையும் அதிகரிக்கும்.

இதன் மூலம் பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும். மேலும், ஒரு தொழிலாளி தனது வேலையின் போது பெறக்கூடிய விடுமுறை அடுத்த ஆண்டுக்கு எடுத்து செல்லவும், வேலையின் போது விடுப்பை பணமாக்குவதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் புதிய தொழிலாளர் குறியீடுகள் விடுமுறைக்கான தகுதித் தேவையை ஒரு வருடத்தில் 240 நாட்கள் வேலையிலிருந்து 180 நாட்களாகக் குறைத்துள்ளன. எவ்வாறாயினும், சம்பாதித்த விடுப்பின் அளவு மாறாமல் இருக்கும். அதாவது ஒவ்வொரு 20 நாட்களுக்கும் சம்பாதித்த 1 நாள் விடுப்பு இருக்கும்.

Exams Daily Mobile App Download

இதேபோல், 30 நாட்களில் இருக்கும் விடுமுறைகளை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான வரம்பில் எந்த மாற்றமும் முன்மொழியப்படவில்லை. தொடர்ந்து வொர்க் ஃப்ரம் ஹோம் (WFH) என்பது, குறிப்பாக கொரோனா தொற்றுநோய் பரவிய பிறகு நாடு முழுவதும் உள்ள சந்தை நடைமுறையாகும். இது சேவைத் துறைக்கு பொருந்தக்கூடிய வரைவு மாதிரி நிலைப்பாட்டில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை 23 மாநிலங்கள் தொழிலாளர் குறியீடு விதிகளை வகுத்துள்ளன. மற்ற ஏழு மாநிலங்கள் இன்னும் இது குறித்து முடிவு செய்யவில்லை என்றாலும் நாடாளுமன்றம் இந்தக் குறியீடுகளை நிறைவேற்றியுள்ளது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here