உலகளவில் தீவிரமாய் பரவும் குரங்கம்மை நோய் – பல மரணங்கள் நிகழ வாய்ப்பு! உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை!

0
உலகளவில் தீவிரமாய் பரவும் குரங்கம்மை நோய் - பல மரணங்கள் நிகழ வாய்ப்பு! உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை!
உலகளவில் தீவிரமாய் பரவும் குரங்கம்மை நோய் – பல மரணங்கள் நிகழ வாய்ப்பு! உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை!

உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாய் பரவி கொண்டிருக்கும் வேளையில் குரங்கு அம்மை நோயும் தீவிரமாய் பரவி வருகிறது. மேலும், இன்னும் சில நாட்களில் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

குரங்கு அம்மை நோய்:

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது. தற்போது வரைக்கும் 58 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. உலகளவில் பார்க்கையில் 3,417க்கும் மேற்பட்டவர்கள் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெகு விரைவாக குரங்கு அம்மை நோய் பரவி வருவதால் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அவசர கூட்டத்தை நடத்த உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

குரங்கு அம்மை நோயை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம் எனவும், இன்னும் சில மாதங்களில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்த கூடும் எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார். இதனால் உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை நோயை சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் மிகவும் வேகமாக பரவி கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு சமூக பரவல் எங்கு நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை – மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு!

குரங்கு அம்மை நோயால் கடுமையான வலி, பயம், கண் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தாலே அலட்சியமாக இல்லாமல் உடனடியாக சிகிச்சை எடுத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வளர்ப்பு பிராணிகளுக்கு கூட குரங்கு அம்மை நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!